logo

நேற்றைய தினம் தென்காசி மாவட்டம்,மேலகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்,மகளிர்க்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

79வது சுதந்திர தினமான 15.08.2025 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யாவின் எண்ணதின்படி மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தென்காசி மாவட்டத்தில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகரம் பேரூராட்சி பகுதியில் 14வது வார்டு பகுதியில் வைத்து மகளிரனி கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிரனி தலைவி திருமதி. மகேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு. சிங்கராயன் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாழர்களாக மாவட்ட தலைவர் திரு. சிவராஜ் மற்றும் தென்காசி மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திரு. சுசி. சுந்தர் மற்றும் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் பா. குலசேகரன் ஆகியோர் கலந்து கொன்டனர். தென்காசி ஒன்றிய மகளிரனி தலைவி திருமதி. ராமலெட்சுமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மகளிர்கள் இந்துமதி,வள்ளிமயில்,முருகலெட்சுமி, கனகலெட்சுமி, உஷா, கௌரி, கீர்த்தனா, ஜோதி, கார்த்திகா, மாரியம்மாள், காளீஷ்வரி,இசக்கிம்மாள்,கனியம்மாள்,இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொன்டு சிறப்பித்தனர். லெட்சுமி நன்றி கூற, மகளிர்க்கு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் நிறைவு பெற்றது.

27
1594 views