logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஒரு மாதத்திற்கு அசைவ உணவுகளை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்!

Non Veg | ஒரு மாதத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்க ஏற்படும் என்று தெரியுமா?

செய்தியின் தலைப்பே பலருக்கு ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். “என்னது, ஒரு மாதத்திற்கு அசைவ உணவுகளை கைவிடுவதா, அதெப்படி சாத்தியம்?’’ என்று எண்ண தோன்றும். எந்தவித உணவுக் கட்டுப்பாடு அல்லது மத நம்பிக்கைகளுக்கு உட்படாத நபர்களுக்கு நிச்சயமாக இது சவாலான விஷயம் தான்.

அதே சமயம், ஏதோ ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும், உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதியேற்று கொண்டவர்களுக்கும் இது பெரிய விஷயமல்ல.

முற்றிலும் சைவத்தை மட்டுமே கடைப்பிடிப்பவர்களை ஒரு வகையாக பிரித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும், இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், அசைவ உணவுப் பிரியர்களாக இருந்தும், ஒரு மாத காலத்திற்கு இதனை கைவிட முடியுமா என்றால், ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லாம், நம் மனக்கட்டுப்பாடுதான் காரணம்.

அதே சமயம், ஒரு மாதத்திற்கு இதை கடைபிடிப்பதன் மூலம் என்னென்ன பலன் கிடைக்கும்? இதுகுறித்து மருத்துவர் ஏக்தா சிங்வால் கூறுகையில், “அசைவ பிரியர்கள் சைவ உணவுக்கு மாற ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக உடல்நலனை கருத்தில் கொண்டு சைவத்திற்கு மாறுகின்றனர். அசைவத்தில் கிடைக்க கூடிய அதே சத்துக்களை சைவத்திலும் ஈடுகட்ட முடியும் என்பது அவர்களுக்கு உந்து சக்தியாக அமைகிறது’’ என்று தெரிவித்தார்.

சைவ உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நீண்டகால நோய்களுக்கான அபாயங்களை குறைக்க முடியும் என்றும் ஏக்தா சிங்வால் கூறினார். இது தவிர சைவ உணவுகளாலும், அசைவத்தை கைவிடுவதாலும் என்னென்ன பலன் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

செரிமானம் மேம்படும் : தாவர உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கும். அது நம் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலை தடுக்கும். நம் மலக்குடல் நடவடிக்கைகளை இலகுவானதாக இது மாற்றும்.

உடல் எடை குறைதல் : உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சைவ உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். இறைச்சிகளை ஒப்பிடும்போது தாவர உணவுகளில் கலோரிச் சத்து மிக குறைவாகும். மேலும் அவற்றில் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும் மற்றும் மிகுதியான உணவுத் தேடலை குறைக்கும்.

அழற்சி குறையும் : இறைச்சி உணவுகள் நம் உடலில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் இன்னும் அதிகமான பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆக, அசைவத்தை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை சாப்பிடுவதால் அழற்சியை தவிர்க்க முடியும்.

113
10936 views

Comment