logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

அதிராம்பட்டினம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

அதிராம்பட்டினம், மார்ச். 5-
அதிராம்பட்டினம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார்.
பெற்றோர்களிடம் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்தும் மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்கள், வாரத்தில் 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப்படுவது குறித்து எடுத்து கூறப்பட்டது. பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி கருங்குளம் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியில் வந்து முடிவடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

107
6846 views

Comment