logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்த பாட்டாளி மக்கள் கட்சி!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக காங்கிரஸ் கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

அதே வேளையில் அதிமுக கூட்டணி தற்போது பலமில்லாமல் காணப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு சில கட்சிகளின் கூட்டணி வைத்துக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஆனால் திமுக கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறி இருப்பது பாஜக கூட்டணி தான்.

ஏனென்றால் பாஜக கூட்டணியில் தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியை இணைந்திருப்பதால் வட மாவட்டங்களில் அதிமுக திமுக இரு கட்சிகளுக்கும் உள்ள ஓட்டு வங்கி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் என தனக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் தொகுதிகளை கேட்டு வாங்கி இருக்கிறது. .

கடந்த இரண்டு தேர்தல்களாக தன்னுடைய வாக்கு வங்கியில் சரிவை சந்தித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய செல்வாக்கை எடுத்துக்காட்டி குறைந்தது 7 தொகுதிகளில் வென்று அமைச்சரவையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

111
5465 views

Comment