logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

மார்த்தாண்டத்தில் குண்டுவெடிப்பு குற்றவாளி

பெங்களூர் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு நடைபெற்றது, இதை அடுத்து தேசிய புலனாய்வு குழுமை பல்வேறு கோணங்களில் தகவல்களை சேகரித்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான ராஜா முகமது (45) , என்பவருக்கு முக்கிய பங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு குழுமை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

ராஜா முகமது , கடந்த 2022-ம் ஆண்டு ஆறு மாதங்கள் மார்த்தாண்டத்தை அடுத்த சாங்கை பகுதியில் சேர்ந்த அருளப்பர் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீரென சாங்கை பகுதிக்கு வந்து அருளப்பனின் வீட்டை சுற்றி வளைத்து அங்கிருந்த வீட்டு உரிமையாளர்களிடம் பல்வேறு கோணங்களில் அவர்களை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற பெங்களூர் குண்டுவெடிப்பில் உள்ள முக்கிய குற்றவாளி மார்த்தாண்டத்தில் தங்கி இருந்தது பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

147
6284 views

Comment