logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பத்துலட்சரூபாமதிப்புமிக்க அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்பட்டது

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புமிக்க அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆளுநர் டாக்டர் ஆர் நித்தியானந்தம் அவர்களும் தலைமையில்
ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர்
லயன் ஜெயகாந்தன் ஒருங்கிணைப்பில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு லாரியில் இன்று அனுப்பி வைக்கப்பட்டது
முதலாம் துணை ஆளுநர் லயன் ஏ ராஜசேகர் அவர்களும், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் லயன் கருணாநிதி அவர்களும், முன்னாள் கூட்டு மாவட்ட பொருளாளர் லயன் எஸ் ராம்குமார் அவர்களும், அமைச்சரவைச் செயலாளர் லயன் ஸ்ரீ முத்துசாமி அவர்களும், அமைச்சரவை பொருளாளர் எம்டி சரவணகுமார் அவர்களும், மாவட்ட சேவை திட்டங்கள் ஒருங்கிணைப்பாளர் லயன் ஜெயகாந்தன் அவர்களும்
மகாகவி பாரதி மண்டல தலைவர்கள் லயன் செந்தில் குமார் அவர்களும், லயன் ராமதுரை அவர்களும் லயன் பாலமுருகன் அவர்களும் லயன் நறுமலர் அவர்களும்,
வட்டார தலைவர் லயன் மீனா குமாரி அவர்களும் லயன் வெங்கடேஷ் அவர்களும் கன்வென்ஷன் கமிட்டி சேர் பர்சன் இன்ஜினியர் ராஜ்மோகன் அவர்களும், ராஜா சுந்தரம் அவர்களும், லயன் கண்ணன் அவர்களும் லயன் தேவராஜ் அவர்களும் லயன் திருப்பூர் காட்டன் சிட்டி தேவராஜ் அவர்களும் லயன் ராமதாஸ் அவர்களும் லயன் தன்ராஜ் அவர்களும் லயன் பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இத்தகைய சிறந்த சேவைக்கு உதவிய அனைத்து லயன்ஸ் சங்கங்களுக்கும்
ஆளுநர் குழு சார்பாகவும் அமைச்சரவை சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்
உங்கள் மாவட்ட
அமைச்சரவை முதன்மை நிர்வாகிகள்
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி

141
19746 views

Comment