கம்பம் நகர தமுமுக சார்பாக ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பொருட்கள் விநியோகம்!
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் நகர தமுமுக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள், இரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதன்படி நேற்று ரம்ஜான் பண்டிகை திருநாளை முன்னிட்டு கம்பம் நகரில் வசிக்கும் 330 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ரமலான் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கு நகரத் தலைவர் தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, துணை தலைவர் சலீம் பாட்ஷா, ஐபிபி செயலாளர் ஹக்கீம், நகர தமுமுக செயலாளர் நிஜாத் அஹமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி, துணை செயலாளர் நூர் முகமது, மாணவரனி செயலாளர் நவ்பல் மற்றும் நகர நிர்வாகிகள் வழங்கினார்கள். இதில் கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜி ஜெய்னுலாபுதீன், செயலாளர் நாகூர் மீரான், துணைத்தலைவர் அப்துல் சமது, துணைச் செயலாளர் சார்புதீன், நிர்வாகி சித்தீக் அண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரமலான் மளிகை பொருட்களை வழங்கினார்கள். மேலும் 30 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.