கலியுக சித்தர் பிருங்கிமலை கோபால் சாமிகள் எழுதும் சித்தர் மருத்துவம் - வர்மக்கலை (பகுதி-1)
கலியுக சித்தர் எழுதும் சித்தர் மருத்துவம் - வர்மக்கலை (பகுதி-1)
###########################
**************************************
வர்மக் கலை, மர்மக் கலை என்பது போல வர்மக் கலை வரலாறும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.
வடமொழி நூலாகிய சரகத்திலும் சுகருதத்திலும் வர்மத் தைப் பற்றிக் காணப்படினும் தமிழ் நூல்களிலே காணப்படும் அளவு விரிவாகவும், நுட்பமாகவும் வழக்கில் உள்ளதாக இல்லை என்பது தெரிய வருகிறது.
சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். மறைவு எனும் பொருளை இது உணர்த்துவதாக இருக்கிறது.
வர்மம் என்பது கலையின் பாற்பட்டதாக எடுத்துக் கொள் ளலாம். இது மருத்துவத்துக்கு மட்டும் பயன்படாமல், எதிரி களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.
வர்மக்கலை ஜப்பானியரின் ஜூடோ முறைகளுடன் ஒத்துப் போகும் ஜூடோ முறை தற்காப்புக்காகவும், பிறரைத் தாக்கவும் பயன்படுகிறது.
ஆனால் தமிழகத்தின் வர்மக்கலை தாக்குதலால் காயப் பட்டு அதனால் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும், கேடுகளுக்கும் சிறந்த பரிகார முறைகளின் உதவி கொண்டு நிவாரம் அளிக்கப் படுகின்றது என்பதால் ஜப்பானியக் கலைக்கும் தமிழகத்து மருத்துவம் வர்மம் ஏற்பட்டால் மரணம் ஏற்படும் என்பர். அவ்வாறு கூறப்படுவதனை உற்று நோக்கினால் அமிர்த நிலைகள் நகரும் தன்மை உடையதாகவும், நிலையற்ற தன்மை கொண்டதாகவும் இருக்கக் காண்கிறோம். வர்ம இடங்களில் அகபட்டு உயிர் முழுவதும் சலிக்காமல் வர்மங்களில் உள்ளடங்கி நிற்கும். அவ்வாறு வர்மங்களில் அடங்கி நிற்கின்ற இடங்கள் 'அடங்கல்' என்று குறிப்பிடப்படுகிறது.
உயிர் உள்ளடங்கி நிற்கும் வர்ம அடங்கல் என்று 16 இடங் கள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு சொல்லப்பட்ட போதிலும் ளில் குறிப்பிடப்படாமல் பாகவும் இருந்டங்கல்னரானம் எனத்
வாமங்களில் அடி பட்டு மூர்ச்சை அடைத்தவர்ளுசிலு வாயங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய தன்னமகளுக்கு வதிப மாதுபட்ட குவியங்கள் தோன்றும்
வாம நோயாளியை வர்ம மருத்துவர் சோதிக்கும்போது முதலில் தவனிக்க வேண்டியது நோயாளியிடத்தில் அபாயல் மி தெரிகிறதா என்பதே வர்மத்தில் அடிபட்ட நோயாளிக்கு கன் நட்டு வைத்தது போல குத்தி நிற்கும் விந்தும், மலம் கழித் திருக்கக் காணலாம்.
நாடி துரிதமான நடையில் அல்லது மிகவும் மெதுவான நடையிலும் காணப்படும் நாடித் துடிப்பில்லாமலும் இருக்கும் இவ்வாறு மூன்று வித நாடிக் குறிக் குணங்கள் அறியப்பட்டால் அந்நோயாளியைத் தொடவே கூடாது.
ஒரு சிலருக்கு ஒலி குன்றியும் துணிகளைக் கிழிக்கும் குண மும். அசாத்தியமான அலறலும், முகம் அதிகப் பிரகாசத்து டனும், கறுத்தும் காணப்படும். அவ்வாறான வர்ம நோயாளிகள் மிக விரைவில் மரணத்தைச் சந்திப்பார்கள் என வர்ம மருத்துவம் கூறுகிறது.
வர்ம மருத்துவம் என்பது நூல் வழி அனுபவம் பெறும் மருத்துவமல்ல, மரபு வழியாக பயிற்றுவிக்கும் அரிய மருத்துவ மாகும். நரம்பில் அடிபட்டு அதனால் நோய் உண்டானால் மருந்தினால் மட்டும் மருத்துவம் பார்த்துச் சரி செய்துள்ட முடியாது. நரம்பில் ஏற்பட்ட அடியை வர்ம முறையில் சரி செய்த பின்பு ஏற்பட்ட நோய்க்கான மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டும்.
வர்ம முறைகளால் எலும்பு முறிவு, எலும்பு ஒடிவு போன்ற வற்றுக்கு செய்யப்படும் மருத்துவம் 'வர்ம மருத்துவ'மாகும். வர்மத்தின் துணை கொண்டு பல நோய்களைக் குணப்படுத்த முடியும்
நோயாளியின் மர்மப் பகுதிகளில் அடித்தும் தட்டியும் தொட்டும், தடவியும், செய்யப்படும் மருத்துவ முறை வர்மத்தைச் சார்ந்ததாகும். இன்றைய நவீன மருத்துவ முறையில் ஒன்றாகக் கூறப்படும் நரம்பியல் முறையே பழங்காலத்தில் வர்ம முறையாக அழைக்கப்பட்டுள்ளது
உடம்பில் வர்மம் கொண்டால் உடனே பரிகாரம் செய்து நிவர்த்தி செய்யப்பட்டாலும் ஏற்பட்ட வர்மம், வர்மத்தின் மாத்திரை அளவை விட மிஞ்சிய அளவில் ஏற்பட்டிருக்குமே யானால் நாள் பல சுடந்த பின்பும் உடலைப் பாதிக்கும் கடுமை யான நோய்களை உண்டாக்கும். கண், காது போன்ற உறுப்புகள் பழுதாகி விடுவதும் உண்டு.
வர்மங்கள் நாடிகளின் வகையாகவும் பிரித்துக் காணப்படு கிறது. இவ்வாறு பிரித்துக் காணப்படுவதனால் வர்மத்தினால் உண்டாகும் நோய்களின் குணங்கள் அறியப்பட்டு மருத்துவம் செய்ய வழியேற்படும்.
வர்மம் கொண்டு நாள்கள் சென்ற பின்னர் அன்னம் ஏற்காமை, உடல் கூனுதல், உடல் கட்டுதல், சேடடைதல், சயம், பீனிசம், காச நோய், கண் மயக்கம், காதுமந்தம், அஸ்திசுரம், எலும்புருக்கி போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்பிருப்பது தெரியவரும்.
இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போதும், போர் வீரர்கள் போர் புரியும் போதும் வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற வர்ம அடிகள் அவர்களின் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடக் கூடிய கொடுமை நிறைந்ததாக இருப்பதனால் அதற்குரிய வர்ம மருத்துக் கல்வியால், அறிவால், பயிற்சியால், நுட்பமான உணர்வால் முதிர்ந்த நிலையுள்ளவராக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
நரம்பில் முறிவு ஏற்பட்டால் நோயாளிக்கு உண்டாகும் குறி குணங்களைப் பக்க விளைவுகள் எனக் குறிப்பிடலாம். நரம்பை அறிந்து நரம்பின் செயலைக் கண்டறிந்து நரம்பினால் உண்டாகும் விளைவு கூறப்பட்டிருப்பது நரம்பியல் முறைகளில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியை காட்டுவதாக இருக்கிறது.
மனித உடம்பின் அனைத்துச் செயல்களும் மூளை என்னும் தலைமைச் செயலகத்திலிருந்தே இயக்கப்படுகின்றன என்பதை அறிவோம். நரம்புகள் ஒவ்வொன்றும் மூளையின் தலைமை நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
வர்மத்தின் நிலைகளை அறிவதுடன் மயக்கம் கபம், சீதம், வியர்வை, சுவாசம் முதலிய குறிகணங்களையும் கண்டறிய வேண்டும் என்று வர்ம மருத்துவம் செய்யத் துவங்குமுன் மருத்துவர் கண்டறிய வேண்டிய தேர்வு முறை அடிப்படைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
படுவர்மங்களுக்கு வர்மம் கொண்ட நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்துக்குள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்னும் அவசரச் சிகிச்சை முறை குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அக் காலத்தை கடந்து விட்டால் நோயாளியைக் காப்பாற்ற முடி யாது எனத் தெளிவாக உரைக்கப்படுகிறது.
ஒடிவு முறிவுக்குரிய மருத்துவம் செய்பவர் படுவர்மம் 18ஆம் தொடுவர்மம் 96ஆம் சரநிலைகள், இடகலை, பிங்கலை, சுழு முனை முதலியவற்றின் இயக்கங்களைக் கண்டறிவதில் நன்கு தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
எந்த நோயையையும் நாடியின் துடிப்பு கொண்டு கண்டறிய முடியும். இந்நாடியை கணிக்க காலம் பார்த்தல் வேண்டும். இந்தெந்த மாதங்களில்தான் நாடியைப் பார்க்க வேண்டும் என விதியாகக் கூறப்படுகிறது.
சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் வைகறையிலும், கார்த்திகையில் நண்பகலிலும், ஆனி, ஆடி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் மாலையிலும், பங்குனி, ஆவணி, புரட் டாசி ஆகிய மாதங்களில் இரவிலும் நாடி பார்க்க வேண்டும்.
மருந்துகளை தயாரிக்க மாதத்தையும், பருவத்தையும் அறிந்து அதன் வழிச் சென்று அதற்குரிய மருந்துகளைச் செய்து சேகரிக்கப்படுவதுடன் நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்ப்பதும் கூடாதென்பது கூறப்படும்.
நோயாளிகளைக் காணுகின்ற நாளின் பேதாபேதங்கள், கோள்களின் நிலை அவற்றின் உச்சம், அதனால் உண்டாகும் விளைவு, நோய்க்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு, நோயா ளிக்கும் கோள்களுக்கும் உள்ள நட்பு, பகை என்னும் உறவு, நோயாளிக்கு வந்த நோய்க்கு மருந்து தயாரிக்கும் காலம் என்பன கண்டறியப்பட்ட பின்பே மருத்துவம் பார்க்க வேண்டும்.
சில வர்மங்கள் கடுமையான நோய் தரும். சில வர்மங்கள் கடும் வலியைத்தரும். சில வர்மங்கள் மரணத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
குறிப்பிட்ட வர்மம் ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கும்.
இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிந்தால், மூன்றாம் நாளில் மரணம் வரும். மதிமயக்கம் உண்டாகும். கண் ஒளிபோகும். உடலில் குத்தல் உண்டாகும். சிறுநீரோடு சீழ் கலந்து போகும். இந்தக் குணங்களே ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டாகும் என்றாலும் இளம்வ்பெண் பூப்படைய மாட்டாள். பருவ மடைந்தவள் மாதவிடாய் அடைய மாட் டாள். கருத்தரிப்பு உண்டாகாது. அதே போன்று ஆண்களுக்கு ஆண்மை குன்றிப் போகும்.
ஒவ்வொருவரின் உடல் அமைப்பு கருவில் இயல்பாக எப்படி அமைந்திருக்கின்றதோ அப்படியே அவரின் ஆயுட்காலமும் அமைந்திருக்கும் என்பதை அறியலாம்.
மனிதன் கருவாக உருவான போதே வாழ்நாள் இவ்வளவு என்பதும் சாகும் நாள் இன்னது என்பதும், நற்குணம், தாழ்குணம், புகழ் இன்னவை என்பதும் கருவில் பதிவாகிறது என்கின்றனர் சித்தர்கள்.
மனிதன் விடுகின்ற மூச்சுக்காற்றானது 6 விரல் அளவு வெளியே சென்றால் 80 ஆண்டும், ஏழு விரல் அளவு வெளியே சென்றால் 62 ஆண்டும், எட்டு விரல் அளவு வெளியே சென்றால் 50 ஆண்டும், ஒன்பது விரல் அளவு வெளியே சென்றால் 32 ஆண்டும் ஆயுளாக அமையும் என்கிறது சித்தர் பாடல்
வர்மங்களில் ஆயுதமோ, அடியோ பட்டால் மரணம் நேரும் என்பது பொதுவாக உரைக்கப்படும் கருத்தாக இருப்பினும் எந்தெந்த வர்மங்களில் அடிபட்டால் எத்தனையெத்தனை நாள்களில் மரணம் வரம் என்பதை வர்ம விதி அறிவிக்கிறது.
உந்தி 2, சங்கம் -2, தயமதிபன் -1, குதம் -1, வத்தி 1 சிருங்காடம் -4, கிரிகை -8, ஆக மொத்தம் 19 வர்மங்கள்.
மேற்கூறிய 19 வர்மங்களிலும் அடியோ, ஆயுதமோ, புண்ணோ பட்டால் ஏழு நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.
தம்பம்-2, இருதயம்-4, தலம்-2, சந்தி-2, சுரோணி-5, தனம்-2, வத்தி-4, சிப்பியம்-4, அபலாபம்-2, பிருகிருதி-2, நிதம்பம்-2. தனரோகி-2 ஆகிய 33 வர்மங்களில் அடி, ஆயுதம் புண்பட்டால் ஒரு திங்களுக்குள் மரணம் ஏற்படும்.
வர்மங்களில் அடியோ காயமோ ஏற்பட்டால் துன்பத்தை மட்டும் தந்து உயிரைப் போக்காத வர்மங்கள் 44 கூறப்படும்.
புற்று நோய்க்கு நிகராக கழுநீர் போல புண்ணாகிச் சீழ் கொண்டு உல் வெளுத்தும் பலவித நோய்களினால் உயிரைப் போக்கும் வர்மமாக தசை வர்மம் கூறப்படும்.
தசைகளின் தாது தண்ணீர் போல எலும்புகளில் ஊறி, இரத்தம் பாய்ந்து வலிமையை உண்டாக்குவதுடன் பதைக்க வைத்துக் கொல்லும் என்று 'எலும்பு வர்மம்' உரைக்கப்படுகிறது.
மாங்கிஷத்திலும் அடங்க, வெறிபட நின்று வேதனை உண்டாக்கிக் கொல்வது 'சிறு நரம்பு' வர்மமாகும்.
உடலை முக்கு வித்து, மடக்கி, தாதைக் கெடுத்து, தசையில் இரத்தத்தைப் பாய்ச்சி நடையைக் குன்றச் செய்து அறிவை வேறொன்றாக்கிக் கொல்லும் பெரு நரம்பு வர்மம்.
அதிக அளவு இரத்தம் பாய்ந்து உடலை மெலியச் செய்து காசம், சலிப்பு, இளைப்பு, விக்கல் போன்றவற்றை உண்டாக்கி கொல்லும் என்று உறுதிபட உரைக்கச் செய்வது நாடி வர்மம்.
மேற்கண்ட வர்மங்கள் உடலை கொல்வதற்கு முன் மரணத்தை விடவும் கொடுமையான நோய்களையும், துன்பங் களையும் தந்து பின்னர் மரணத்தைத் தரும் என்று அறியப் படுகிறது.
சில நோய்களையும், நோயின் கொடுமைகளையும் காணும் போதும், கேட்கும்போதும் அவை என்றோ ஏற்பட்ட வர்மத் தினால் வந்த துன்பமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்று வது போல வர்மத்தின் செயல்கள் காணப்படுகின்றன.
சில வர்மங்கள் மிகக் கடுமையாக உடனடி மரணத்தை ஏற்படுத்தவல்லதாக உள்ளன.
தலை உச்சியின் மத்தியில் உள்ள துண்டு நரம்பு முறிந்தால் உடனே உயிர் பிரியும்.
இதயத்திலிருந்து மூன்று அங்குலத்துக்கு மேல் இருக்கும் பூவலசன் நரம்பு முறிந்தால் ஐந்தாம் நாளில் மரணம்.
இப்பு காலத்தில் உள்ள 'நீர்ப்பிசி' நரம்பு முறிவு ஏற் பட்டால் மூன்றாம் நாளில் மரணம்.
பஞ்சவர்ணக் குகையிலிருக்கும் 'குடகரி' வர்மம் முறிந்தால் மூன்று நாளில் மரணம்.
'சுவாசப்பை' நரம்பு முறிந்தால் மூன்று நிமிடங்களில் மரணம்.
கருவுற்ற மங்கையர்க்கு துறபேசி நரம்பில் வர்மம் கொண்டால் ஈனும் குழந்தையும் ஓராண்டில் மரணமடையும்.
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலுள்ள உடற்ப குதிகளில் காணப்படும் வர்மங்களின் எண்ணிக்கை 108 என்று வர்ம சூத்திரமும், ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்று ஓவு முறிவு சாரி நிகண்டகராதியும் கூறுகின்றன.
வர்மங்கள் பொதுவாக 108 என்றும், ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்று கூறப்பட்டாலும் வர்மத்தின் இடங்களை குறிப்பிட்டு, எந்தெந்த உறுப்புகளில் எத்தனை வர்மங்கள் ஏற்படும் என்று கூறும்போது இந்த எண்ணிக்கை மாறுபடுகின்றது.
வர்மம் நேரும் உறுப்புகள் எனக் குறிப்பிடப்படுபவை வருமாறு:
கால் இரண்டு-22, கை இரண்டு-22, வயிறு-3, மார்பு-9. முதுகு-14, கழுத்தின் மேல்-37, தசையில்-10, எலும்பில்-8, நாடியில் 21, பெருநரம்பில்-9, நரம்பில்-36, சந்தில்-20 என 159 வர்மங்கள் கூறப்படுகின்றன.
மேலும் வர்மங்களின் எண்ணிக்கை 122 என வர்ம சிகிச்சை எனும் நூலில் பின்வருமாறு காணப்படுகிறது.
படுவர்மம்-12, தொடுவர்மம்-96, தட்டுவர்மம்-8, தடவுவர்மம்-4. நக்குவர்மம்-1, நோக்கு வர்மம்-1 ஆக மொத்தம் 122. வர்ம பீரங்கி எனும் நூல் 108 வர்மம் என உரைக்கப்பட்டுள்ளது.
உடலின் அளவுப்படி தலை முதல் கழுத்து வரை, கழுத்து முதல் தொப்புள் வரை, தொப்புள் முதல் மூலம் வரை, கை, கால் என்னும் அளவின்படி வர்மங்கள் உரைக்கப்படுகிறது.
தலை முதல் கழுத்து வரை-25, கழுத்து முதல் தொப்புள் வரை-45, தொப்புள் முதல் மூலம் வரை-9, கைகளில்-14, கால்களில்-15 ஆக மொத்தம் 108.
காரீரல் வர்மம்
நெஞ்சுக்குக் கீழே சற்று பக்கவாட்டில் மூன்று அங்குலம் கீழே அமைந்திருக்கிறது. இந்த வர்மத்தில் அடிபட்டால் இரத்தக் கட்டு ஏற்படும். அடிக்கடி மயக்கம் வரும். காய்ச்சல் அடிக்கும். அடிபட்ட திலிருந்து எட்டு மணிக்குள் சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும். இல்லையெனில் அடிபட்டவர் இறக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
வைத்தியம்
பாதிக்கப்பட்ட இடத்தை நன்றாக நீவி விட வேண்டும். அதன் பிறகு அவரைத் தூக்கி நிற்க வைத்து இருகைகளாலும் அவரை குறுக்காகப் பிடித்துத் தூக்கி உலுக்குங்கள். அவர் குணமடைந்து விடுவார்.
அடிபட்டவருக்கு சுக்கு கஷாயம் போட்டுக் குடிப்பதற்கு கொடுக்க வேண்டும். ஒரு பூண்டைத் தட்டி சாறு பிழிந்து அதைப் பஞ்சில் நனைத்து அடிபட்டவரை முகரச் செய்ய வேண்டும். தினமும் இரண்டு வேளை நல்லெண்ணெய் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அள்ளக்கால வர்மம்
உடலின் பக்கவாட்டுப் பகுதியில் இடுப்புக்கு மேலே செப்பு வர்மத்துக்கு ஒரு அங்குலம் மேலே இந்த வர்மம் அமைந்துள் ளது. இந்த வர்மத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனே மயக்கம் வரும். மூச்சு வாங்கும் போது விலாப் பகுதியில் பயங்கரமாக வலி எடுத்து சளி அதிகமாகும். தலை வலியும், இருமலும் ஏற்படும். ஒன்பது மணி நேரத்திற்குள் அடிபட்டவருக்கு சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையெனில் தலைவலி, இருமல், சளி தொடரும்.
வைத்தியம்
அடிபட்டவரின் உச்சி முடியைப் பிடித்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டும். அவருடைய குரல்வளை வர்மத் தில் உங்கள் ஆட்காட்டி விரலால் ஒன்பது முறை குத்த வேண் டும். மெதுவாகக் குத்தவேண்டும். மயக்கம் தெளிந்து மெதுவாக எழுந்து உட்காருவார். இதுபோல ஒன்பது நாட்களுக்கு இந்த சிகிச்சை செய்ய வேண்டும்.
மனித உடலில் பல மர்ம இடங்கள் இருக்கின்றன. அத்தகைய இடங்கள் வர்மங்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றன.
மனிதர்களின் தலைப்பகுதியில் மட்டும் முப்பத்தேழு வர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
1. திலர்த வர்மம்
2. கண்ணாடி கால வர்மம்
3. அந்தம் வர்மம்
4. அந்தம் வர்மம்
5. தும்மிக்கால வர்மம்
6. பின்சுவாதி வர்மம்
7. கும்பிடு கால வர்மம்
8. நட்சத்திர கால வர்மம்
9. பால வர்மம்
10. மேல்காடி வர்மம்
11. முன் சுவாதி வர்மம்
12. கெம வர்மம்
13. மந்திரகால வர்மம்
14. பின்வட்டிக்கால மர்மம்
15. காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17 ஓட்டு வர்மம்
18. சென்னி வர்மம்
19. பொய்கைக் காலம் வர்மம்
20. அலவாடி வர்மம்
21 மூக்கடைக்கி கால வர்மம்
22. கும்பேரிக்கால வர்மம்
23. நாசிக்கால வர்மம்
24. வெட்டு வர்மம்
25. அண்ணாங்கால வர்மம்
26. உறக்க கால வர்மம்
27. கொக்கி வர்மம்
28. சங்குதிரி கால வர்மம்
29. செவிருத்தி கால வர்மம்
30. கொம்பு வர்மம்
37. சுமைக்கால வர்மம்
32. தலைப்பாகை வர்மம்
33. பூட்டெல்லு வர்மம்
34. மூர்த்தி அடக்க வர்மம்
35. பிடரிகால வர்மம்
36. பொச்சை வர்மம்
37. சரிதி வர்மம்
மனி
மனித உடலின் மார்புப் பகுதியில் மொத்தம் 13 வர்மங்கள் உள்ளன.
1. தள்ளல் நடு குழி வர்மம்
2. திவளைக் கால வர்மம்
3. கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
4. சுழி ஆடி வர்மம்
5. அடப்பக்கால வர்மம்
6. முன்டெல்லு வர்மம்
7. பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
8. சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
9. ஆனந்த வாசுகால வர்மம்
10. கதிர் வர்மம்
11. கதிர்காம வர்மம்
12. கூம்பு வர்மம்
13. ஹனுமார் வர்மம்
1. உதிரக்கால வர்மம்
2. பள்ளை வர்மம்
3. மூத்திரகால வர்மம்
4. குத்து வர்மம்
5. நேர் வர்மம்
6. உறுமிக்கால வர்மம்
7. ஆமென்ற வர்மம்
8. தண்டு வர்மம்
9. லிங்க வர்மம்
10. அண்ட கால வர்மம்
11. தாலிக வர்மம்
12. கல்லடைக்கால வர்மம்
13. காக்கட்டைக் கால வர்மம்
14. புஜ வர்மம்
15. விதனுமான் வர்மம்
மனித உடலின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்
1. மேல் சுருதி வர்மம்
2. கைக்குழி காந்தாரி வர்மம்
3. மேல் கைப்பூட்டு வர்மம்
4. கைச்சிப்பு எலும்பு வர்மம்
5. பூணூல் கால வர்மம்
6. வெல்லுறுமி தல்லுறுமி வர்மம்
7. கச்சை வர்மம்
8. கூச்ச பிரம வர்மம்
9. சங்கு திரிகால வர்மம்
10. வலம்புரி இடம்புரி வர்மம்
கைகளின் முன்பக்கம் உள்ள வர்மங்கள்
1. வலம்புரி இடம்புரி வர்மம்
2. தல்லை அடக்க வர்மம்
3. துதிக்கை வர்மம்
4. தட்சணக்கால வர்மம்
5. சுளுக்கு வர்மம்
6. மூட்டு வர்மம்
7. மொளியின் வர்மம்
8. கைகு சத்திட வர்மம்
9. உள்ளங்கை வெள்ளை வர்மம்
கைகளின் பின்பக்கம் உள்ள வர்மங்கள்
1. தொங்கு சதை வர்மம்
2. மணிபந்த வர்மம்
3. சுண்டோதரி வர்மம்
4. நடுக்கவளி வர்மம்
5. சுறுவிரல் கவளி வர்மம்
6. மேல் மணிக்கட்டு வர்மம்
7. விஷமணிபந்த வர்மம்
8. கவளிகால வர்மம்
கால்களின் முன்பக்கம் உள்ள வர்மங்கள்
1. மூத்திரகால வர்மம்
2. பதக்களை வர்மம்
3. ஆமைக்கால வர்மம்
4. பக்க வர்மம்
5. குழச்சி வர்மம்
6. முடிச்சி வர்மம்
7. சிறுவிரல் வெளி வர்மம்
8. சிரட்டை வர்மம்
9. கால் மூட்டு வர்மம்
10. கால் கண்ணு வர்மம்
11. நாய்த் தலை வர்மம்
12. குதிரை முக வர்மம்
13. கும்பேறி வர்மம்
14. கண்ணு வர்மம்
15. கோணச் சன்னி வர்மம்
16. அடக்ககால வர்மம்
17. திடவர்மம்
18. கண்புகழ்கால வர்மம்
19. பூமிக்கால வர்மம்
கால்களின் பின் பகுதியில் உள்ள வர்மங்கள்
1. இடுப்பு வர்மம்
2. இழிமேக வர்மம்
3. இழிப்பிறை வர்மம்
அணி வர்மம்
5. கோச்சு வர்மம்
6. முடக்கு வர்மம்
7. குளிர்ச்சை வர்மம்
8. குசத்திட வர்மம்
9. உப்புகுத்தி வர்மம்
10. பாதச்சக்கர வர்மம்
11. கீழ் சுழி வர்மம்
12. பதக்கல் வர்மம்
13. முண்டக வர்மம்
பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்
1. மேல் சுரிதி வர்மம்
2. மேலாக கால வர்மம்.
3. கீழாக கால வர்மம்
4. தட்டெல்லு வர்மம்
5. மேல அகண்ட வர்மம்
6. நாய் இருப்பு வர்மம்
7. கீழ் அண்ட வர்மம்
8. குத்திகால வர்மம்
தேகம் முழுவதும் வலைப்பின்னல் போல நரம்பு மண்டலம் பரவிக் கிடப்பதால் உடம்பின் எந்தப் பகுதி உபாதைக்கு ஆளானாலும் அது நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.
நரம்புகள் யாவும் எலும்பு போர்வையின் இடுக்குகள் வழியாகத்தான் உடல் முழுவதும் பரவுகின்றன.
அந்த நரம்புகளே தசைகளை இயக்குகின்றன.
சித்தர்கள் இந்த உடம்பை 72,000 நாடிகள் இயக்குவதாகக் கூறுகின்றனர்.
தலை உச்சியில்-7000
காதுகளில்-3000
கண்களில்-4000
மூக்கில்-3330
கன்னத்தில்-5000
பிடரிக்கு கீழே தோள் வரை-6000
கழுத்தில்-1000
கையில் - 3000
தோளுக்குக் கீழே தொப்புளுக்கு
மேலே மார்பகத்தில் - 9016
பிடரியின் கீழ் - 8000
விலாவில்-3000
இடுப்பு அடி வயிறு சிறுநீர்புற வழிகளில்-7000
மூலத்தில்-3000
இணைப்புகளில்-2000
பாதங்களில்-1500
மற்ற இடங்களில்-7154
மொத்தம்-72000
முள்ளம் தண்டில் உள்ள முன் எலும்புகள் வெள்ளையான குறுத்து எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் முள்ளம் தண்டு எந்தப் பக்கமும் நெளிந்தும், அசைந்தும் கொடுக்கும். தண்டின் மேற்புறம் பொருந்தியுள்ள தலையின் மூளை குலுங்காதபடி அத்தண்டின் கழுத்து, மூக்கு, இடுப்பு முதலியவைகளில் விளைவுகள் உள்ளன. இந்த தண்டின் அடிப் பகுதி ஆசனக் கூட்டில் பொருந்தியுள்ளது.
உடம்பின் எல்லா பாகங்களும் உரிய நேரத்தில் சரியான முறையில் வேலை செய்ய வைப்பது நரம்பு மண்டலமாகும்.
மூளையும், தண்டுவடமும் நரம்பு மண்டலத்தின் இரண்டு முக்கியமான பிரிவுகளாகும். மூளையின் வலது பக்கம், இடது பக்கம் ஆகிய இரு பகுதிகளில் இருந்து நரம்புகள் புறப்படு கின்றன.
தலையின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தின் மூலமாக முதுகெலும்புக்குள் நுழைகின்றன.
இடது பாகத்தில் இருந்து கிளம்பியவை வலது பக்கமும் வலது பாகத்தில் இருந்து கிளம்பியவை இடது பக்கமும் மாறிச் செல்கின்றன. இதனால் மூளையின் இடது பக்கம் பாதிக்கப் பட்டால் உடம்பின் வலது பாகத்திற்கு கெடுதல் உண்டாகின்றது. வலது பக்கம் பாதிக்கப்பட்டால் உடம்பின் இடது பாகத்திற்கு கெடுதல் உண்டாகின்றது.
பன்னிரண்டு ஜோடி நரம்புகள் மூளையிலிருந்து பிரிந்து நெற்றிப் பகுதிக்கு வழிகின்றன முப்பதியோரு ஜோதி நரம்புகள் தண்டு வடத்திலிருந்து புறப்பட்டு உடம்பு முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
எலும்புகளைப் பொறுத்தமட்டில் நெஞ்சு எலும்பு குழந் தைப் பருவத்தில் எட்டுத் துண்டுகளாகவும், நடு வயதில் மூனற் கவும் முதுமையில் ஒன்றாகவும் மாறிவிடக் கூடியது.
எலும்புகளின் விளக்கம்
*****************************
கபாலத்தில் கருக்கு விளிம்புகளால்
சேர்க்கப்பட்ட துண்டு எலும்புகள்-8
காதுகளில் உள்ள சிறு துண்டுகள்-8
முகத்தில் உள்ள சிறு எலும்புகள்-14
தாடை எலும்பு-1
நெஞ்சு எலும்பு-1
ஆசன எலும்பு-4
முள்ளந்தண்டின் முள் எலும்பு-24
தோள்பட்டையின் முக்கோண எலும்பு-2
இடமும் வலமும் உள்ள இணைப்பு எலும்பு-2
காறை எலும்பு-2
புஜ எலும்பு-2
முன்கைகள்-4
கைகளில் சிறு எலும்புகள்-16
உள்ளங்கைகள்-10
கைவிரல்களில்-24
கை பெருவிரல்களில்-4
தொடை எலும்பு-2
முழங்கைகள்-2
முழங்கால்கள்-4
பாதங்கள்-52
தசைவது அசையாதது என
எலும்பு இணைப்புகள்-210
வர்மம் எனும் அரிய கால சித்தர்களால் உருவாக்கப்பட்டு சொல்லப்பட்டதாகும். இந்த அரிய கலையை அறிந்துள்ள சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அகத்தியரும், போகரும் ஆவர்.
வர்மக்கலை தொடர்பான ஏடுகள் பெரும்பாலும் அகத்தி யர், போக முனிவர், தேரையர் சித்தர் ஆகியோரின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.
வாய் மொழியாக இந்த சித்தர்களால் கூறப்பட்ட வர்ம சாஸ்திரம் அந்த சித்தர்களின் சீடர்களால் எழுதப்பட்டு வழிவழியாய் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சித்தர்கள் அருளிய வர்ம ஏடுகள் பல.
1. போகர் வர்ம சூத்திரம்
2. வர்ம பரிகாரம்
3. வர்ம விதி
4. வர்மானி
5. வர்ம திறவு கோல்
6. வர்ம சரநூல்
7 வர்ம குடோரி
8. வர்ம குருநாடி
9. வர்ம சரசூத்திரம்
10. வர்மசாரி
11. வர்மகண்ணாடி
12 வர்ம பஞ்சசூத்திரம்
13. வர்ம பீரங்கி
14. வர்ம கண்ணாடி வடக்கின் வழி
15. வர்ம நாலுகை மாத்திரை
16. வர்ம பஞ்ச வித பதிவிடங்கல்
17. வர்மலாட சூத்திரம்
18. வர்ம ஊசி முகம் 1800
19. நர மாமிச நூல்
20. வர்ம புலிப்பாணி
21. வர்ம பொன்னூசி திறவு கோல்
22. வர்ம குண்டூசி திறவு கோல்
23. வர்ம முறிவு சாரி நிகண்டு அகராதி
24. வர்ம வில்லும் விசையும்
25. தேரையர் நரம்பு சூத்திரம்
26. வர்ம சிலோற்பத்திக் காண்டம்
27. வர்ம காவியம்
வர்மக் கலையைப் பற்றி கூறும் ஏடுகள் அனைத்தும் மொத்த வர்மங்கள் 108 என்று குறிப்பிடுகின்றன. ஆனால் ஒவ்வொன்றும் தொகுதி தொகுதியாக பிரிப்பதில் வித்தியாசப் படுகின்றன.
சிரசு முதல் கண்டம் வரையிலுள்ள வர்மங்கள்-25
கண்டம் முதல் வயிறு வரையுள்ள வர்மம்-45
நாடி முதல் மூலம் வரையிலுள்ள வர்மம்-9
கால்களில் உள்ள வர்மங்கள்-15
கைகளில் உள்ள வர்மங்கள்-14
ஆக மொத்தம்
108
என்று ஒரு நூலில் காணப்படுகின்றது.
வாத வர்மம்-64
பித்த வர்மம்-24
தட்டு வர்மம்-8
உள் வர்மம்-6
சிலோற்பன வர்மம்6
ஆக மொத்தம்-108
என்று இன்னுமொரு நூல் விளக்கம் தருகிறது.
விலங்கு வர்மம்
தோள் பட்டைக்கு முன்பக்கமாக காரை எலும்பிற்கு பக்கத்திலுள்ள குழியில்தான் இந்த வர்மம் அமைந்திருக்கிறது. இந்த வர்மத்தில் அடிபட்டால் மார்பில் பளிச்சென்று வலி எடுத்து மார்பின் மேற்பக்கம் யாவும் பரவி முகம் முழுவதும் வியர்த்துக் கொட்டி மயக்கம் ஏற்படும்.
வர்ம பாதிப்புக்குள்ளான பக்கமுள்ள கையை மேலே தூக்க முடியாது. காரை எலும்பின் மேற்பக்கம் செல்லும் நரம்பும் பாதிக்கப்பட்டு கழுத்திலும் வலி ஏற்படும். கழுத்தை திருப்ப முடியாது. எட்டு மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்கவில்லை எனில் வர்மப் பாதிப்புக்குள்ளான பக்கம் செயலற்றுப் போகும்.
வைத்தியம்
பாதிப்புக்குள்ளான வரை உட்காரம் செய்து உச்சி முடியை பிடித்துக் கொண்டு புறங்காலால் அவருடைய முதுகின் மேற்புறத்தில் ஒன்பது முறை தட்ட அவருக்கு மயக்கம் தெளியும். அதன்பின் அடிபட்ட இடத்தில் நீவி, கழுத்து நரம்பையும் நீவி உப்பு மூட்டை நல்லெண்ணெய் ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
நுனிநாசி வர்மம்
நுனிமூக்கில் இந்த வர்மம் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் கண்கள் இருண்டு மூக்கிலிருந்து இரத்தமும், சளியும் ஒழுகும். உடம்பு குளிர்ந்து போகும். அடிபட்டவர் ஜன்னி கண்டு கன்னாபின்னாவென்று உளறுவார். மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்த வில்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகும்.
வைத்தியம்
பாதிப்புக்குள்ளானவரை உட்காரச் செய்து அவர் மூக்கின் மீது நல்லெண்ணெயைத் தடவி இரு பக்கக் காதுகளுக்கு அருகில் அமைந்திருக்கும் குருத்துகளிலும் மெதுவாக அழுத்த வேண்டும். உப்பு மூட்டை நல்லெண்ணெய் ஒத்தடமும் சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்விதம் செய்து வர இப்பாதிப்பு குணமடையும்.
கதிர் வர்மம்
நெஞ்சுக் குழிக்கும், தும்மிக்கால வர்மத்திற்கும் நடுவில் அமைந்திருக்கிறது இந்த வர்மம். இந்த வர்மத்தில் சாதாரணமாக அடிபட்டால் நெஞ்சுப் பகுதியில் வலி பரவும் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதுடன் இந்த வர்மத்தில் பலத்த அடிபட்டவர் ஐந்து நாட்களுக்குள் பேசும் சக்தியை இழந்து விடுவார். தலை சுற்றுதல், காய்ச்சல், இரத்த வாந்தியுடன் சிகிச்சை செய்யாது போனால் மரணத்தையும் அவர் சந்திப்பார்.
வைத்தியம்
பாதிக்கப்பட்டு கிடப்பவரின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலுக்கு கீழே உங்களுடைய ஆட்காட்டி விரலைக் கொக்கி போல் வளைத்துப் பிடித்துக் கொண்டு பலமாக இருக்க வேண்டும். பின்பு அவரைத் தாக்கி உட்கார வைத்துக் கொள் ளுங்கள். உங்கள் கால்களால் அவருக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு அவருடைய தலை உச்சியில் உங்கள் கையில் மூன்று முறை அடிக்க வேண்டும். அதன்பின் அடிபட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவி நீவிவிட்டு ஒத்தடம் கொடுத்து அவரைத் தாக்கி நிறுத்திக் குறுக்காகப் பிடித்துக் கொண்டு உலுக்கினால் குணமாகிவிடும்.
கை இணைப்பு வர்மம்
முழங்கைக்கு மறுபக்கத்தில் நேர் மேலே அமைந்துள்ளது. அங்கிருக்கும் கை இணைப்பில் அழுத்திப் பார்த்தால் ஒரு எலும்பு இருப்பதை உணரலாம். அதற்குப் பக்கவாட்டில் உள்ள இடத்தில் இந்த வர்மம் அமைந்துள்ளது. இந்த வர்மத்தில் அடிபட்டால் இரத்தக் குழாய்கள் சேதமடைந்து வீங்கி பலமாச வலி ஏற்படும். அந்த இடத்திலிருந்து மார்பு வரை வலி பரவும். நான்கு நாட்களுக்குள் கிசிச்சை இல்லையெனில் கை செய லிழக்கும்.
வைத்தியம்
அடிபட்ட கையின் விரல்களை வெட்டி எடுத்து நல்லெண்ணெய் நீவி விட்டால் குணமாகும்.
மணிபந்த வர்மம்
மணிக்கட்டிலிருந்து இரண்டு விரலளவு தள்ளி கையின் உட்பக்கமாக அமைந்திருக்கின்றது. இந்த வர்மத்தில் அடிபட் டால் அந்தக் கை செயலிழந்து போகும். கையின் உட்பக்கத்தில் எரிச்சல் தோன்றும். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள் ளும், மயக்கம் வருவது போலத் தோன்றும். முகமெல்லாம் வியர்த்துக் கொட்டும். காய்ச்சலும் அடிக்கும்.
வைத்தியம்
பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக நீவி விட்டு கைவிரல் களை நெட்டி எடுக்க வேண்டும். நல்லெண்ணெய் காய்ச்சி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
மயக்க கால வர்மம்
புருவங்களில் வளர்ந்திருக்கும் முடிகளுக்கு நடுவே நடுப் புருவத்தில் இந்த வர்மம் அமைந்திருக்கும். இந்த வர்மத்தில் அடி விழுந்தால் நெற்றிப் பொட்டுக்களில் தெறிப்பது போல வலி எடுத்து இரண்டு கண்களிலும் பயங்கரமாக குத்தல் எடுக்கும். மயக்கமான தூக்கம் வரும். இரண்டு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் இரத்தக் குழாய் வெடித்து மரணமடைவார்.
வைத்தியம்
சுக்குத்துண்டு வாயில் போட்டு மென்று அடிபட்டவரைத் தூக்கி உட்கார வைத்து அவருடைய காதுகளிலும், நாசித் துவா ரங்களிலும் ஊத வேண்டும். நெற்றிப் பொட்டு நரம்புகளைத் தளர்வடையச் செய்து அடிபட்ட இடத்தில் நன்றாக நீவி விடுங்கள். நல்லெண்ணெய் காய்ச்சி ஒத்தடம் கொடுத்து வந்தால் குணமாகும்.
மாத்திரை நரம்பு முறிவு
மாத்திரை நரம்பானது மூச்சுக்குழலின் நடுவினில் உள்ளது. அந்த நரம்பு முறிவுற்றால் பாதிக்கப்பட்டவர் பயந்து வேகமாக எழுந்து குதித்து அலறி கீழே மயங்கி விடுவார்.
அதுமட்டுமில்லாமல் சத்தமிட்டு சிரிப்பார். இருபத் தெட்டாவது நாள் கண் பார்வை பறிபோகும். கடும் ஜுரம் வரும். கைகால் ஊசிக் குத்தல் போல வலியெடுக்கும். பல்லும், நாக்கும் கூசும். தேகம் விம்மும். மூக்கடைப்பு உண்டாகும். நாற்பத்தெட் டாம் நாள் குளிர் ஜன்னி வரும். தொண்ணூற்றெட்டாவது நாள் மரணம் உண்டாகும்.
வெருளியே மேனியெங்கும் கனத்து விம்மும் வீங்குமடா மூக்கடைக்கும் நாற்பத்தெட்டில் செருமியே சன்னியோடு சீதமுண்டாம் சொந்தநாள் எண்பதிலே தெளிவுண்டாகும் பருகியே ஏகாசி சுரம்போல் காயும் பகர்ச்சையாய் குணக்குறியும் தொண்ணூற் றெட்டில் நெருங்கியே வந்திடுகில் ஒருநூற் றெட்டில் நிச்சயமாய் சுடலைதனில் உயிர்போம் பாரே.
வாறான உள்ளத்தின் இடது பக்கம் வளரும் பத்தினி நரம்பினில் முறிந்ததானால் சீறியே நித்திரையில் தரிசனம் போல் சேர்ந்ததாலோ காணுமடி தொண்டைக்குள்ளே வீறான சுளுசுளென வெருவெருத்து மேல் துடிக்கும் அங்கமெல்லாம் துடிப்புண்டாம்வ் வாறான வீணா தண்டிடையில் குத்தி அனலெழும் பியானுவங்கள் மிகவுண்டாமே.
மிகவுண்டாம் அடங்காத பெலமும் கட்டும் கேமதா லிங்கமதில் விந்து பாயும் நகந்தெறிக்கும் விந்துகண்ட எட்டாம் நாளில் நாடியே மரணமென நலமாய் சொன்னேன் செகந்தனிலே செகத்தோருக்குக் குறிகண்டாலோ திரும்பிநீ அவுசதங்கள் செய்ய ண்ேடாம் அகமறிய மானிடரே பழியே சொல்வான் அன்பான குருவருளை அறியமாட்டான்.
அறியவே சொல்லுகிறேன் தடவு மார்க்கம் ஆதரவாய் மத்தினி லெடுத்திருத்தி பிரியாமல் குருவருளை தினமும் போற்றி பேசறிய திருவருளை பெலமாய் வைத்து நெடியாக நடுவணையில் கச்சை கட்டி நெடியான பாலணையில் குய்யம் போட்டு குறியாக பதித்திறுக்கி வைத்துக்கொண்டு கூர்மையாய் இடம் பிரியே திருத்துவெட்டி
வெட்டியே வலம்பிரியின் முட்டினாலே மேவியே அணைத்துதிர திரையில் சுற்றி சுட்டியே முன்பிறை தாரை தன்னில் காயமிடு குய்யமதில் கரத்தாலூணு வட்டமாய் கண்டமதில் பிறைக்குள்ளாக மருவியே இருபுறமும் திருத்துக் கட்டி ஒட்டியே நரம்பெல்லாம் வெளியே காணும் உத்தமனே கண்டு மனங்கருத்தால் நீயும்.
கருத்தாக கண்டுமே பின்னல் கண்டு கருவாக திருநிலையும் பச்சையது பொருந்தவே நிலையதனில் வைத்துக் கொண்டு புகழாக கையிதமும் செய்து கொண்டால் திருத்தியே நரம்புநிலை சரிப்பட்டேகும் தீர்ச்சைபோல் இந்தமுறை செய்து கொண்டால் பரந்தாடும் நிலையெல்லாம் பதியில் சேரும் பகரவே இன்னுமொரு பகர்ச்சை கேளு.
பகர்ச்சையாய் நேரமதில் கையிதமும் செய்ய பகரு நல்லதுவாய் பதியில் சேர்த்து சிகிச்சையாய் செய்திடவே தெளிவுண்டாகும் தேகமதில் நரம்புபிசகல் தெளிவூடாடி சுகமிட்டு தானெழும்பி அடர்ந்து நிற்கும் ஆதரவாய் பகர்ச்சையதில் மருந்து செய்ய நகமணிபோல் மனக்கண்ணால் நாடிப் பாரு நல்கியே மாத்திரையும் செய்து கொள்ளே.
உள்குத்து வர்மம்
உள்குத்து வர்மம் நெஞ்சினடியில் இணைந்துள்ளது. அந்த வர்ம நிலையில் முறிவு ஏற்பட்டால் மூன்று நிமிடங்களில் மரணம் அடைவார். அந்த வர்மததில் அடிபட்டு நசுங்கி பிசகினால் தேகத்தில் நடுக்கமுண்டாகி மூச்சு விட முடியாது. திணறல் ஏற்படும்.
வகுத்ததோர் நெஞ்சினடி வாயின் பக்கம் வகுத்த உள்குத்து வர்மம் முறிந்ததாகில் தொகுத்ததோர் கடிகையது மூன்றுக்குள்ளே சூச்சமுடன் வரிவுயிர்போய் சுடலை புக்கும் பகுத்துமேல் இசங்கியே நெருக்கினாலும் பகர்ச்சையாய் காணுமடா மேல் துடிக்கும் மிகுப்பான தரிசனமும் மிகவுண்டாகும்
விறுவிறுத்து மேலிளைப்பு ஆகுமென்றே.
கீரிநரம்பு முறிவு
கீரி நரம்பானது அடிக்கழுத்தின் பக்கம் அமைந்துள்ளது. இந்நரம்பு முறிவு ஏற்பட்டால் உடலின் நிறம் மாறி தேகம் துடிதுடிக்கும். மண்டை உச்சியில் எரிச்சல் ஏற்பட்டு குளிரும். பற்களும், வாயும் துர்நாற்றமடிக்கும். ஜன்னி உண்டாகி புத்தி கெடும். சுவாசம் திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிக்கும். நாடி தளர்ந்து இருபத்தெட்டாவது நாளில் மரணமேற்படும்.
தீருமடா கழுத்தடியின் பக்கந்தன்னில் கீரி நரம்பது முறிந்தால் தேகமெல்லாம் சேருமடா நிறம்வேறாய் தடுதிடென்று தெறிக்கும் மேல்குன்னு மண்டை யெரிச்சல் போலாம் பாருமடா நட்டெல்லு நேர் குறுக்கே பனியழலா யதிகமுற்று பல்வாய் நாறும் சீருமடா சன்னியுண்டாம் மதிமயங்கி சிக்கெனவே உணர்விட்டு உறக்கம் போலாம்.
கண்ணாடிக் கால வர்மம்
கண்ணாடிக்கால வர்மம் மனித உடலில் மூக்கின் நடுப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த வர்மத்தில் பலமாக அடி விழுந்தால் அவர் கண்கள் இருண்டு போய் சில நிமிடங்களில் அவருடைய மூக்கிலிருந்து இரத்தம் கொட்டிவிடும். உடனே சிகிச்சை அளிக்காது போனால் மரணத்தை சந்திக்க நேரிடும்.
வைத்தியம்
பாதிக்கப்பட்டவரின் உச்சி முடியைக் கொத்தாக ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் அடிபட்ட இடத்தில் மெதுவாக நீவி விட்டு சிறிய சுக்குத் துண்டை வாயில் போட்டு மென்று அவருடைய காதுகளிலும், நாசித் துவாரங்களிலும் ஊத வேண்டும். அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து நல்லெண்ணெயை ஊற்றி சுக்கையும் போட்டுக் காய்ச்சி அடிபட்ட இடத்தில் தினமும் மூன்று வேளை வீதம் மூன்று நாட்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இடுப்புத் தண்டு வர்மம்
மனித உடலின் இடுப்பின் நடுவே தளைந்திருக்கும் தண்டு வடத்திற்கு நான்கு விரலளவு தள்ளி அமைந்திருக்கிறது. இந்த வர்மத்தில் அடிபட்டால் மேல்தசைகள் இறுகி அந்தப் பகுதி முழுவதும் வலிக்கும். அடி வயிறு கனத்து உப்பலாகி விடும். இடுப்புக்கு கீழே மிகக் கனமான பாரம் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு வலி அதிகமாக இருக்கும்.
வைத்தியம்
சிறு சுக்குத் துண்டைப் போட்டு நன்றாக மென்று அடி பட்டவரின் காதுகளிலும், நாசித் துவாரங்களிலும் ஊத வேண்டும். அடிபட்ட இடத்தில் நல்லெண்ணெய் விட்டு தடவி நீவிவிட்டு அவரை நிற்க வைத்து இருகைகளாலும் அவரைக் குறுக்காகப் பிடித்து உலுக்க குணமாகும்.
குடுக்கை நரம்பு முறிவு
குடுக்கை நரம்பானது யோனி இருக்குமிடத்திற்கு இருவிரல் அளவுக்கு மேலே அமைந்துள்ளது. அந்த நரம்பானது முறிந்து போனால் அடிக்கடி குளிர் ஜூரம் வந்து தேகம் பதறும் பிதற்றல் ஏற்படும். தீராத தாகம் ஏற்படும். தேகம் இளைத்து அதிகம் வியர்க்கும். மயக்கம் வரும்.
வைத்தியர் நரம்பு முறிவற்ற இடத்தில் அழுத்தி பார்த்தால் மற்ற நரம்பெல்லாம் மேல் நோக்கி இருப்பதை அறிய முடியும். பஞ்ச புண்பதி எண்ணெயை உள்ளுக்கு கொடுத்து பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் அமிர்த முக்கூட்டு எண்ணெயினை ஊற்றி நன்கு தேய்த்து அங்காங்கே அழுத்திக் கொடுக்க குண மாகும். சிகிச்சையளிக்க தவறினால் நோயாளி அறுபத்து மூன்றாவது நாள் மரணமடைவது நிச்சயம்.
நகைப்பான யோனி இருவிரலின் மேலே நாடி நிற்கும் குடுக்கை நரம்பது முறிந்தால் பகைத்துமே அடிக்கடியே பனியுண்டாகும் பரிதவித்து அங்கமது பதறி விம்மும் தொகையான நேரமது கடந்த தானால் தூச்சமுடன் தன்மைபோல் சுறுக்கு பேசும் தகையெழுப்பி தாகமுண்டாம் தண்ணீர் வேண்டும் சத்தலுட னேகிவரும் சரமிட்டாடில்.
விட்டோடி யோப்பிழைப்பு மின்னும் தேகம் விரண்டுமே பதின்மூன்றில் நடுசாமத்தில் தட்டொழிங்கி நின்றபனி யழலுமேறி சண்டாள கோபமுடன் வியர்வை யுண்டாம் துட்டெழுப்பும் பேதெழும்பி மயக்கமாகி தூச்சமுடன் என்றுபல நினைவுமுண்டாம் மட்டொதுங்கு சரமத்தில் உணவுமுண்டாம் மாறியே இருபத்தி ரண்டில் நாடிடு.
இரண்டிலே நடுநிலையை நெருக்கிப் பாரு என்றநரம் பெல்லாம் எழுந்தொன்றாகி விண்டிருந்த நிலையதினை மேலாய் நிற்கும் விரும்பியுன் பஞ்சபுஸ்பாதி எண்ணெய் கொண்டிடுமேல் அமிர்தமுக்கூட்டின் எண்ணய் கூர்மையுடன் தாரையினால் கையிதம் செய் பண்டிருந்த உறுப்பிடையின் சங்கள் செய்ய பகர்ந்தநல் குடுக்கை நரம்பது அதிர்ந்தகாயம்
புனல் வர்மம்
புனல் வர்மம் நாடியின் அடியில் உள்ளது. இந்த வர்மத்தில் முறிவு ஏற்பட்டால் நடு உச்சியில் விண்ணென்று வலியெடுக்கும். லிங்கம் சுருங்கி துவண்டு விடும். கண்களிலும், நகக்கண்களிலும் குத்தல் ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக ஆறாவது நாளில் கண்கள் இரண்டும் பார்வை இழந்து உணர்வு மாறும். உணவு தடுமாறி ஜன்னி சீதளம் உண்டாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
கொள்ளவே நாபியதின் நடுவிடையில் குமுறியே புனல்வர்மம் முறிந்ததானால் வில்லுமே உச்சிநடு மத்திதன்னில் விட்டிலைப்போல் துடிக்குமடா சுண்டும் கோணும் கள்ளமடா லிங்கமது சுருங்கி நாளும் கண்ணும் நகக்கண்ணும் இரண்டுமூர்ந்து குத்தும் மெள்ளவே ஆறாம்நாள் கண்க ளிரண்டும் விழிகாணா தோடுமதி யுணர்வு மாறும்.
உணர்வது மாறுமடா சன்னி சீதம் வுற்றுயிரும் புறம்புக்கு மென்றே கணையாகும் நாளெட்டு கடந்து சென்றால் கருவாக காயராஜங்க எண்ணெய் குணமாக துவாலையது தானே செய்து கூறிய மாத்திரையில் கையிதம் செய் பிணமான வர்மமது தீருமென்று பேசு நரம்பறிந்து நீபேச நன்றே.
சுவாசப்பை நரம்பு முறிவு
மனித உயிர் நாடியான சுவாசப் பையின் நரம்பு முறிந்து போனால் பாதிக்கப்பட்டவர் மூன்று நிமிடங்களில் மரண மடைவார். எதிர்பாராது சுவாசப்பை இயங்குமானால் நாற்பத் தொன்றாவது நாளில் மரணமடைவார். அதிலிருந்தும் பிழைத்து விட்டால் எண்பத்து எட்டாவது நாளில் மரணமடைவது உறுதி
குய்யத்தின் கீழ்குய்யமதி னகத்துள் கூண்ட சுவாசப்பை நரம்பது முறிந்துட்டாலோ ஒய்யவே சுடிகையது மூன்றுக்குள்ளே உயிர் பிரியவே நின்று இயங்குமானால் தொய்யவே நாற்பத்து ஒன்றாம் நாளில் துணிவாக உயிரதுவும் பிரியும் பாரு தைய்யவே கடந்தாலோ எண்பத்தெட்டில் தப்பாமல் உயிர்பிரியும் தப்பாதாமே.
வருண நரம்பு முறிவு
வருண நரம்பானது பீசவித்தின் இடது பக்கத்தில் நடுவினில் உள்ளது. அந்த நரம்பு முறிவு கொண்டால் சன்னியும், ஐந்தாம் தாள் ஜுரமும் உண்டாகும். பதினெட்டாம் நாள் மூச்சுக் குழலில் சுபம் உண்டாகும். இருபத்தெட்டாம் நாள் மீண்டும் சன்னி உண்டாகி முப்பத்து மூன்றாவது நாள் மரணம் ஏற்படும். மரணம் ஏற்படாது போனால் வர்ம எண்ணெய் தாரை செய்து குணப்படுத்தலாம்.
மன்றாகும் இதனுடைய இடது பக்கம் வருளை நடுவதிலே நரம்பது முறிந்தால் குன்றாமல் சன்னியது உடனே யுண்டாம் கூன்றெழுந்த சன்னியது மூன்றிலேகும் சென்றாலும் அஞ்சாம்நாள் பனியழலாய் திறமான ஒன்பதில் கைகால் வலிக்கும் அன்றாடும் கிறுகிறெனே வலிக்கும் பாரு அழலுண்டாய் பதினெட்டில் கபத்தோடி கீழ்.
சுபமுண்டாய் இருபத்தெட்டில் சன்னியும் காணுமடா முப்பத்து மூன்றில் சாவான் நலமாக கடந்தாலோ மரணமாகும் நாடிநீ முப்பொருளைக் கண்டு தேறு உபதேச மாகவே முன்னே சொன்ன ஓதரிய தடவலத்தின் மார்க்கந் தன்னை இன்பமுடன் செய்துமேல் துவாலை செய்ய ஏகுமின் மாமுனிவர் இசைந்தா ரிதமே சூச்சமே சங்குதிரி நடுவிடையில் சொல்லு மாத்திரை நரம்பது முறிந்தால் பாய்ச்சலுடன் பயந்துமேல் எழுந்து சாடும் படபடென அலறுமுடன் மயங்கி வீழும் கூச்சமுட னானகண்டால் ஒதுங்கி பேசும் குடுகுடனே சிரிக்கும் வாய்பொத்திக் கொள்ளும் தீர்ச்சையாய் நாளேழு அறுபத்தொன்றில் திகழவே கண்காணா திருக்கும்பாரே.
இருளாக அறுபத்தோர் கடிகை தன்னில் யேகாசி சுரம்போலே காய்ந்து கொள்ளும் மருளாக முன்னிருந்த குணக் குறியும் மாறியே உணர்வுமுண்டாம் கைகாலெங்கும் பெருகவே ஊசிபோல் தரித்துக் குத்தும் பேதலித்து மீளுமடா சொன்னோம் பின்னும் கருகியே பல்கடிக்கும் கணணு தூங்கும் கதிரா பல்நாவு கூசும் பாரே.
வெருவியே மேனியெங்கும் கனத்து விம்மும் வீங்குமடா மூக்கடைக்கும் நாற்பத்தெட்டில் செருமியே சன்னியோடு சீதமுண்டாம் சொந்தநாள் எண்பதிலே தெளிவுண்டாகும் பருகியே ஏகாசி சுரம்போல் காயும் பகர்ச்சையாய் குணக்குறியும் தொண்ணூற் றெட்டில் நெருங்கியே வந்திடுகில் ஒருநூற் றெட்டில் நிச்சயமாய் சுடலைதனில் உயிர்போம் பாரே
பூண்டுகளை எடுத்துத் தட்டிச் சாறு எடுத்து அடிபட்ட வரின் நாசியில் காட்டி அவரைச் சுவாசிக்க செய்ய வேண்டும். பின்பு அடுப்பில் சிறிய கிண்ணத்தை வைத்து தேங்காய் எண் ணெய் ஊற்றி அதில் பூண்டுகளைத் தட்டிப் போட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த எண்ணெயை இலேசான சூட்டுடன் இரண்டு காது களிலும் ஐந்து சொட்டுகள் வீதம் ஊற்றி பஞ்சை வைத்து அடைத்து விடுங்கள். இப்படித் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு சிகிச்சை அளித்து வந்தால் காது சரியாக விடும். கேட்கும் சக்தியும் வந்து விடும்.
தொடரும்......
கலியுக சித்தர் எழுதும் சித்தர் மருத்துவம் - வர்மக்கலை (பகுதி-1)
#வர்மம் #வர்மக்கலை #சித்தர்மருத்துவம் #கலியுகசித்தர் #பிருங்கிமலை_கோபால்_சாமிகள் #varma