logo

தேசியத்தின் முன்ணனி தலைவராக. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார் : கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ பேச்சு


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு அளித்தது. இது குறித்து கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய மாநில மக்கள் நலம் மட்டுமின்றி தேச நலன் ,கூட்டாட்சி தத்துத்துவம் , ஜனநாயகம், மதசார்பின்மை ஆகியவற்றை முன்னிறுத்தி குடியரசு தலைவர், ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே சட்டத்தின் மூலமாக 10 மசோதக்களையும் நிறைவேற்றியுள்ளார்.இது தமிழக உரிமை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளை மீட்டெடுத்துள்ள தேசியத்தின் முன்ணனி தலைவராக தமிழக முதலமைச்சர் உருவெடுத்துள்ளார்.அவருக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் நன்றியினை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் 1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் சாலை வசதிகள் அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் தான் வைத்து கோரிக்கைக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.மேலும் வருகின்ற சித்ராபவுர்ணமி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் ,உணவுகள்,மருத்துவம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குமுளியில் கட்டுப்பட்டு வரும் பஸ்ஸ்டாண்டிற்கு மங்களதேவி கண்ணகி பெயர் சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து கம்பம் கம்பராயப்பெருமாள் கோவிலில் முதியோர்கள் அமரும் வகையில் , இருக்கைகள் அமைப்பதற்கான இடத்தினை ஆய்வு செய்தார். இதில் கம்பம் நகரசெயலாளர்கள் வீரபாண்டியன்(வடக்கு),பால்பாண்டியராஜா (தெற்கு ), மாநில செயற்குழு உறுப்பினர் குருகுமரன் , தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கராத்தே இராமகிருஷ்ணன் , அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

5
2736 views