logo

தமிழக பாரதிய ஜனதாகட்சியின் மாநிலத் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து !

நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராகவும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராகவும், தாங்கள் செய்து வரும் மக்கள் பணிகளானது, நமது கட்சியின் மாநிலத் தலைவராக மென்மேலும் சிறப்புற்றிருக்க வேண்டுகிறேன். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக-எனும் மக்கள் விரோத சக்தியை அகற்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி, அவர்களின் லட்சியமான ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ உருவாக்கிடவும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்திடவும் அயராது உழைப்போம்.
-மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்

- திருச்சி பிரசன்னா

33
3726 views