logo

வானவில் அறக்கட்டளை சார்பாக உதவிகள்

மேடவாக்கம் முதியோர் இல்லத்திற்கு வானவில் அறக்கட்டளையிடமிருந்து உதவியகம்

சென்னை, மேடவாக்கம்:

வானவில் 🌈 அறக்கட்டளை சார்பில், மேடவாக்கம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அரிசி மூட்டைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நலத்திட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இச்செய்தி நிகழ்வு, திரு. ராஜா K. மூர்த்தி அவர்களின் நிதியுதவியுடன், வானவில் அறக்கட்டளையின் தலைவர் திரு. வெங்கடேசன் மற்றும் செயலாளர் திரு. சாய் பாலு ஆகியோரின் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது.

சமூகப் பொறுப்பின் அடிப்படையில் முதியோரின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள், பலருக்கு முன்னுதாரணமாக அமைகின்றன. நிகழ்வின் போது முதியோர் இல்ல வாசிகள் மகிழ்ச்சியுடன் உதவிகளை பெற்றுக் கொண்டனர் மற்றும் நன்றியையும் தெரிவித்தனர்.

வானவில் அறக்கட்டளை தொடர்ந்து சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்காக நன்மை பயக்கும் சேவைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

16
1457 views