logo

மாணவர்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு சீரழிக்கும் தனியார் கல்லூரி மீது பரபரப்பு புகார் உயர் கல்வித்துறை அமைச்சர் இடம்

சென்னை கேளம்பாக்கத்தில் இந்துஸ்தான் கல்லூரி என்று 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்னர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று தந்தார் மறைந்த கல்வியாளர் பரோபகாரர் மற்றும் சிறந்த தொலைநோக்கு பார்வையலான டாக்டர் கே.சி. ஜி வர்க்கீஸ் அவர்களால் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது கல்லூரி சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு பல பேரை உயர்ந்த பதவிகளுக்கு கொண்டு சென்ற கல்வி நிறுவனம் தற்போது வியாபார நோக்கத்தோடும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது இக்கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் நிர்வாகம் சொன்ன நாள் தவிர்த்து கட்டப்பட்டால் கந்து வட்டி மீட்டர் வட்டி போல அபராதம் தொகை பல மடங்கு விதிக்கப்படும் அதை கட்ட மறுத்தால் கல்லூரிக்கு வரும் மாணவர்களை கூட வரவில்லை என இஎன்டி பிளாக் செய்து விடுவார்களாம் அப்போ லாக் புக்கில் மட்டும் தான் அவர்களின் வருகை பதிவாகுமா கணினியில் பதிவாகதம் அதை காட்டி நீ கல்லூரிக்கு வரவில்லை உனக்கு வருகை ஏடு குறைவாக உள்ளது நீ மீண்டும் அதே 1.2.3.4.?ஆண்டு பணத்தைக் கட்டி மறுபடியும் படிக்க வேண்டும் என அவர்களை வலு கட்டாயமாக மீண்டும் மீண்டும் படிக்க வைத்து பல லட்சங்கள் அவர்களிடமிருந்து பிடுங்குகிற தாம் நிறுவகம் இதில் என்ன ஏது என்று கேட்டால் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சியை கூட்ட கணினியில் ஏற்ற மாட்டார்களாம் தேர்ச்சி அடையவில்லை மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று என்று நிறுவனம் கூறுகிறதாம் யாரேனும் கல்லூரி முதல் வருடம் சென்ற முறையிட்டால் அவர்களின் சோலி அத்தோடு முடிந்ததாம் அவர்களாக கல்லூரி விட்டு நிற்கும் வரை விடாமல் டார்ச்சர் செய்வாராம் மற்றொரு பக்கம் சுகாதாரம் சென்று பார்வையிட்ட போது சுகாதாரத்தில் தரம் கெட்டு உள்ளது கல்லூரி என தெரியவந்தது குடிக்கும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாக சில மாணவர்கள் கூறினார்கள் மாணவர்கள் தானே ஏதோ கல்லூரி மீது வெறுப்பால் கூறுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் அங்கு சென்று பார்த்தபோது கல்லூரி வளாகத்தின் உள்ளே குடிக்க தண்ணீர் பிளாஸ்டிக் 25 லிட்டர் கேன் ஒன்று தண்ணீர் கவ்தப்பட்டிருந்தது அதை கீழிருக்கும் பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் சிந்தும் தண்ணீருக்காக வைக்கப்பட்டு இருந்த டப்பாவில் பல நாட்களாக சுத்தம் செய்யவில்லை போல பூச்சி புழுக்கள் உற்சாகத்துடன் தென்பட்டன அப்போதுதான் மாணவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது வெட்ட வெளிச்சத்தில் இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்குள்ள இத்தனை புழுக்கள் என்றால் இவர்கள் எங்கிருந்து குடிநீர் தொட்டியை சுத்திகரிப்பு செய்திருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது மேங்கோ மலேரியா போன்ற நோய்களுக்கு வழீ வகுத்து கொடுக்கிறது சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து கல்லூரியில் ஆய்வு செய்தால் பல ஆதாரங்கள் இன்னும் கிடைக்கும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர் இது போன்று சுகாதாரத்திலும் மாணவர்களின் எதிர்காலத்திலும் அக்கறை இல்லாத கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பல மாணவர்கள் அமைச்சர் அலுவலகத்தில் புகார் அளித்தால் அமைச்சருக்கு அல்வா கொடுத்துள்ளதாம் அந்த நிறுவனம் அவர்கள் கல்லூரிக்கு சரியாக வரவில்லை அதை செய்யவில்லை படிக்கவில்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறதாம் இதையெல்லாம் அறியாமல் அமைச்சரவை அலுவலகத்திலும் மாணவர்கள் மீது தான் தவறு உள்ளது என நினைத்து எந்த நடவடிக்கையும் கல்லூரி மீது எடுப்பதே இல்லையாம் இதை மீறி அமைச்சர் அலுவலகத்தில் இருந்து கேட்டால் நீங்கள் தலையிட வேண்டாம் இந்த விஷயங்களில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுகிறோம் உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுகிறோம் என்று அமைச்சர் அலுவலகத்தை அடக்கி விடுகிறார்களாம் கல்லூரியில் பல மாணவர்கள் சேருவதற்கு முன்பு பத்தாம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆவார்கள் அனைவரும் இவர்களுக்கு ஒன்றும் புரியாது விளங்காது பாடும் கற்று தரும் ஆசிரியர்கள் கூறும் வார்த்தைகள்பல மாணவர்கள் இதனால் தேர்ச்சி அடைவதே இல்லையாம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் இது போன்ற கல்லூரி நிர்வாகத்தின் மீது மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக ஆய்வு செய்து மாணவர்களின் வருகையையும் பார்வையிட்டு கல்வியை வியாபாரம் ஆகி மாணவர்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு சீரழிக்கும் இது போன்ற கல்லூரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

7
801 views