logo

சர்வதேச கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகள். 11 தங்கம், 3 வெள்ளி பெற்று கம்பம் மாணவர்கள் சாதனை




கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகளில், தேனி மாவட்டம் கம்பம் மாணவ மாணவிகள் 11 தங்கம், 3 வெள்ளி பெற்று கம்பம் மாணவர்கள் சாதனை
படைத்தனர்.

மத்திய அரசின் விளையாட்டு துறையின் சார்பாக கோவாவில்
சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன.
வயது, எடை, பெல்ட் வாரியாக கராத்தே போட்டிகளும்,
யோகாசனத்தின் அடிப்படையான ஐந்து பிரிவுகளில் யோகாசனப் போட்டிகளும், ஒற்றை வரிசை, இரட்டை வரிசை, சுருள் வாள், மான்கொம்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிலம்பம் போட்டிகளும் நடைபெற்றன.

8 நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டின் சார்பாக தேனி மாவட்டம் கம்பம் தி மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியினைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு அதிகமான தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

கராத்தே பிரிவில் மாணவர்கள்
ரிசப், ஹர்ஷவர்த்தன், ஹரீஸ்வா, கிருத்திகேஷ், கௌதம், தீபக் தர்சன், பிரித்திகா, தாரணி
யோகாசினி ஆகிய 9 பேர் தங்கப்பதக்கமும், ஆதித்யன்
வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். யோகாசனப் பிரிவில்
ஹரீஷ்வா தங்கப்பதக்கம்,
ஹர்ஷவர்த்தன், பிரித்திகா
வெள்ளிப் பதக்கம், சிலம்பம் பிரிவில் தாரணி தங்கப் பதக்கம் என மொத்தம் 11 தங்கப் பதக்கங்களும்,
3 வெள்ளிப் பதக்கங்களும்,
பெற்று, நமது தேசத்திற்கும், நமது தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மத்திய அரசின் அங்கீகாரம் இட்ட சான்றிதழ்களும், பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தமிழ்நாடு மாநில கூடுதல் பாடத்திட்ட பயிற்சியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், கியோசி.டாக்டர்.கராத்தே இராமகிருஷ்ணன் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

0
0 views