logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- 93 மனுக்களுக்கு உடனடி தீர்வு

அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொழுது பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்திடவும் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரவளர்ச்சி துறை,மற்றும் ஊராட்சிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மகளிர் சுய உதவிக் குழு திட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,மாவட்ட வழங்கல் துறை,பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை மாற்றத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை,போன்ற தோட்டக்கலைத்துறை,தாட்கோஉள்ளிட்ட அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் இன்று (30. 05. 2005) திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவள்ளரை கிராம பஞ்சாயத்தில் ஹனுமன் கோவில்,ஜெபி திருமண மண்டபத்திலும், பிச்சாண்டார் கோயில் கிராம பஞ்சாயத்திலும் உத்தமர் கோவில்பிரம்மா சரஸ்வதி திருமண மண்டபத்திலும், காரிய மாணிக்க கிராம பஞ்சாயத்தில் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,மாணவப் பெருமாள் கோவில் கிராம பஞ்சாயத்தில் நொச்சியம் திருமுருகன் திருமண மண்டபத்திலும், சிறுகனூர் கிராம பஞ்சாயத்தில் சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெற்று 102 பயனாளிகளுக்கு ரூபாய் 72.30 லட்சம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்களுடன் முதல்வர் முகாம்களில் பல்வேறு துறைகளில் சார்பில் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள் முகாம்கள் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையினால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகளை மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.முகாம் நடைபெற்ற ஐந்து இடங்களில் பெறப்பட்ட 1986 மனுக்களில் 93 மனுக்களுக்கு உடனே தீர்வு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள மனுக்கள் ஆய்வுக்குப்பின் தீர்வு காணப்படும். இம்முகாமில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சி கதிரவன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் சே ஸ்டாலின்‌ குமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட நகர் ஊர் அமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மணச்சநல்லூர் வட்டாட்சியர் ஏ பழனிவேல் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

133
2160 views

Comment