
தனி நபர் வருமானத்தில் டாப் 50 பட்டியலில் இடம்பெறாத இந்தியா : உலக சராசரியை விட 6 மடங்கு பின்தங்கியுள்ள அதிர்ச்சி தகவல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான, தனி நபர் வருமானத்தில் உலகின் முதல் 50 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறாதது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் சராசரி இந்தியாவைவிட சுமார் 6 மடங்கு அதிகமாக உள்ளது. உலகளவில் 4வது பொருளாதார நாடாக வளர்ந்துவிட்டதாகவும் விரைவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான, தனி நபர் வருமானத்தின் உலகின் முதல் 50 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் கனடாவைச் சேர்ந்த visual capitalist இணையதளம் வெளியிட்டுள்ளது. தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்கும்போது கிடைக்கும் தொகையாகும். அதன் அடிப்படையில் தனி நபர் வருமானத்தில் நாடுகளின் விவரம் பின்வருமாறு..*லக்சம்பர்க் – ரூ.1.20 கோடி
*அயர்லாந்து – ரூ. 93 லட்சம்
*சுவிட்சர்லாந்து – ரூ.89.87 லட்சம்
*சிங்கப்பூர் – ரூ.79.59 லட்சம்
ொ*7வது இடத்தில் அமெரிக்கா – ரூ.76.33 லட்சம்
*50வது இடம் பிடித்த கிரீஸ் நாட்டின் தனிநபர் வருவாய் ரூ.22 லட்சம்
*உலக சராசரி தனிநபர் வருவாய் ரூ.12.15 லட்சம்
*இந்தியாவின் தனி நபர் வருவாய் ரூ.2.12 லட்சம்தனிநபர் வருமானத்தில் இந்தியா கடுமையாக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், போலியான பெருமைகளும் போலியான வளர்ச்சியும் மத்திய அரசால் முன்வைக்கப்படுவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இந்தியாவை பணக்கார நாடாக மாற்றுவதற்கு பதிலாக உலகின் மிக பெரிய பணக்காரராக அதானியை மாற்றுவது தான் பிரதமர் மோடியின் இலக்காக இருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.