திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு !
இன்று (18.௦7.2௦25) காலை 9-3௦ மணிக்கு திருச்சி மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அது சமயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் இரா.வில்சன் இராசசேகர் (தேர்தல் பிரிவு), வட்டாட்சியர் செல்வகணேஷ் (தேர்தல் பிரிவு) ஆகியோருடன் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.