logo

திருச்சி பஞ்சப்பூரில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ஆய்வு

திருச்சி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சப்பூரில் உள்ள "முத்தமிழறிஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின்" செயல்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தார் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்.
விமான நிலையத்திற்கு ஈடு கொடுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து முனையத்தில், பேருந்துகளின் இயக்கங்களையும், பயணிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் கடைகளையும் அப்போது நேரில் பார்வையிட்டார்..
மேலும் இந்த பேருந்து முனையத்தின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், அதனை அவ்வப்போது கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு வழிமுறைகளை வழங்கினார்.
அப்போது அங்கு வந்திருந்த பயணிகள் மற்றும் இளைஞர்களிடம் இப்பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் கருத்துக்களையும் கவனமாக கேட்டறிந்தார்..
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன்.இ.ஆ.ப. அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், நகரப் பொறியாளர் திரு. சிவபாதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல பொதுமேலாளர் திரு. சதீஷ்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-திருச்சி பிரசன்னா

31
662 views