
ஆடிப்பூரத்தை முன்னிட்டு
அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் ஆண்டாள் திருமஞ்சனம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம்
அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையதில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவில். இத்திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி மாத ஆடி பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் பழங்கள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு தீபங்கள் கொண்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டாளுக்கு மல்லிகை, ரோஜா, தாமரை, சம்பங்கி, செண்டு பூ போன்ற பல்வேறு மலர்கள் கொண்டு புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த ஆடி பூரா விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிவேல் ராஜன், நிர்மலாதேவி குடும்பத்தார்கள், ஸ்ரீ தனலட்சுமி ஜூவல்லர்ஸ், திருமலை கற்பக அறக்கட்டளை உள்ளிட்டோரும், ஓம் நமோ நாராயணா பக்தர் சபை மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபாடு செய்து சென்றனர்.