logo

அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போர் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்தில் பட்டா வழங்க கோரி மனு

மதுரை ஒத்தக் கடை வடக்கு தாலுகாவில் உள்ள நரசிங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டாங்குளம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 37 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளுக்கு, நரசிங்கம் ஊராட்சிக்கு வீட்டுவரி செலுத்தி வருகிறார்கள். மேலும், 2000-ம் ஆண்டில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அரசு சார்பில் அனுமந்த பட்டா வழங்கப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு பெற்று, மின் கட்டணமும் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் இந்த 37 குடும்பங்களையும் அங்கிருந்து காலி செய்யக் கோரி குறிப்பாணை அளிக்கப்பட்டது. பிறகு, அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்தக் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அச்சுறுத்தல் வாய்மொழியாக தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனால், இந்தப் பகுதி மக்கள் பெரும் மன உளைச்ச லுக்கு உள்ளாக நேரிடுகிறது.

அரசு பயன்பாட்டுக்குத் தேவைப்படாத புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க லாம் என வருவாய்த் துறை மூலம் 2000-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, தட்டாங்குளம் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்தில் பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

71
5512 views