கலைஞர் நினைவு நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரின் நினைவு நாளையொட்டி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜெ.கோவிந்தராஜன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் தில்லைகுமார் தலைமையில் கல்வி உபகரணங்கள் வழங்கினர். உடன் ஒன்றிய துணை செயலாளர் பால்சுதாகர், கிளை கழக செயலாளர்கள் ராமு, நாகராஜ் இளைஞரணி பாகமுகவர் மதன், கழக நிர்வாகிகள் யுவராஜ், வெங்கடேசன், இன்பராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.