"கோவில் திருவிழா அனுமதி மறுப்புக்கு எதிராக — மாமன்ற உறுப்பினர் M. யாகூப் தலைமையில் தாம்பரத்தில் கொந்தளித்த சாலை மறியல்!"
தாம்பரத்தில் சாலை மறியல் — கோவில் திருவிழா அனுமதி மறுப்புக்கு எதிர்ப்புதாம்பரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுத்த காவல்துறை உதவி ஆய்வாளர் அக்னி குமாரை கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.அய்யம்மா நாயக்கர், அங்காள பரமேஸ்வரி கோயில் தர்மகர்த்தா, கோவில் தொடர்பான விஷயங்களில் நியாயம் கேட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு, மாமன்ற உறுப்பினர் யாக்கூப் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.