
"திருவிழா நடுவே காவல்துறையின் ஆதிக்கம் – மாமன்ற உறுப்பினரை M. யாகூப் , அவமதித்த உதவி ஆய்வாளர்!"காவல் துறையிலும் அரசியல் தலையீடும்?
தாம்பரம் 50-வது வார்டு ரங்கநாதபுரத்தில் அங்காளம்மன் கோவில் ஆடி திருவிழா விவகாரம் — மாமன்ற உறுப்பினர் எம். யாகூப் மீது மரியாதை குறைவு, காவல் துறையின் நடவடிக்கை
நேற்று (13.08.2025) தாம்பரம் 50-வது வார்டு, ரங்கநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் ஆடி திருவிழா நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், தாம்பரம் காவல்துறையினர் திடீரென வந்து, விழா நடைபெறும் இடத்தில் இருந்த ஒலிபெருக்கியை அணைக்கச் சொல்லி, ஒலிபெருக்கி ஒப்பந்ததாரரை தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இந்த தகவலை கோயில் தர்மகர்த்தா உடனடியாக தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் 50-வது வார்டு எம். யாகூப் அவர்களுக்கு தெரிவித்தார். அவர் உடனடியாக தாம்பரம் காவல் ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொண்டார். காவல் ஆய்வாளர், “ஒப்பந்ததாரரை உடனே திருப்பி அனுப்புவோம்” என உறுதி அளித்தார்.
அவ்வேளையில் தலைமை காவலர், ஒப்பந்ததாரரை எம். யாகூப் முன்னிலையில் அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த உதவி ஆய்வாளர் அக்னிகுமார், “ஏன் இவருடன் பேசுகிறீர்கள்? எங்க அய்யப்பன் (கோயில் தர்மகர்த்தா) அவனை தூக்குங்க” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். இதற்கு எம். யாகூப், “ஏன் கத்துகிறீர்கள்? பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது” என்று பதிலளித்தார்.
ஆனால், அக்னிகுமார் அவர்கள் “சரிதான் போயா?” என்று கையை ஓங்கி மரியாதையற்ற முறையில் பேச, எம். யாகூப் அங்கு சாலை மறியலில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் காவல் ஆய்வாளர் அங்கு வந்து, எம். யாகூப், கோவில் நிர்வாகத்தினர், மக்கள் ஆகியோரை சமாதானப்படுத்தி, மறியல் கலைக்கச் சொல்லினார்.
அப்போது, திடீரென தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர், கூட்டத்தின் மத்தியில் மரியாதையற்ற வார்த்தைகள் பேசத் தொடங்கினார். உடனே காவல் ஆய்வாளர், “யாருப்பா நீ? தேவையில்லாமல் ஏன் இங்கு பேசுற? இங்கு நடப்பதற்கும் உனக்கு சம்பந்தம் என்ன? கிளம்பிப்போ” என்று எச்சரித்தார். அவர் மேலும் பேசியதால், அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார்.
பின்னர் காவல் ஆய்வாளர், “உதவி ஆய்வாளர் மீது தவறு இருந்தால், நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதி அளித்து, அனைவரையும் அனுப்பி வைத்தார். ஆனால், பின்னர் திமுக மண்டலக் குழு தலைவர் காமராஜ் அவர்கள், தாம்பரம் காவல் நிலையத்தில் எம். யாகூப் மீது பொய் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் அண்ணன் ஜாகிர் உசேன் அவர்கள், உதவி ஆய்வாளர் மற்றும் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த நபர் மீதும் புகார் அளித்தார்.
கடந்த 10 நாட்களாக, 50-வது வார்டு பகுதிக்குட்பட்ட தண்டு மாரியம்மன், செங்கேணி அம்மன், செங்கழனி அம்மன் போன்ற கோவில்களில் திருவிழாக்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. எந்த மத வேறுபாடும் பார்க்காமல் எம். யாகூப் அவர்களுக்கு அங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எல்லா கோவில்களிலும் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மட்டும் அங்காளம்மன் கோயிலில் தடைவிதித்து, அவரை சிக்க வைக்கத் திட்டமிட்டு, தாம்பரம் காவல்துறையில் சிலரை வைத்து யாரோ ஒருவர் இயக்கியிருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.