கைது செய்தவுடன் பொன் வசந்த்துக்கு நெஞ்சுவலி..
பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேட்டில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றபோது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே போலீசார் அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடனே கணவரை பார்க்க மேயர் இந்திராணி சென்றுவிட்டார். இதனால், அவர் நேற்று ராஜினாமா செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.