மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில்
சுதந்திர தின விழா - 2025
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள்
இன்று(15.08.2025) சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில்
தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, 42 பயனாளிகளுக்கு ரூபாய் 42.21 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதல் நிலை அலுவலர்கள், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 314 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.