logo

புதுக்கோட்டை மேற்கு பாஜக கட்சி சார்பாக நிதி உதவி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கோயில் கிரிவலப் பாதைக்கு உட்பட்டு உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி விராலிமலை மலை மீது உள்ள ராஜகோபுரத்தில் ஏறி கீழே விழுந்து இறந்த சமூக ஆர்வலர் ஆரப்பன் என்கிற ஆறுமுகத்திற்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூலமாக மாவட்ட தலைவர் திரு.என். ராமச்சந்திரன் அவர்கள் நிவாரணத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம்(ரூ.100000) காசோலை வழங்கினார்.
உடன் மாவட்ட நிர்வாகிகள் குரு.ஸ்ரீராம், செல்லதுரை, ராஜ்குமார், மாரியம்மாள், திருப்பதி அம்மாள், விராலிமலைமேற்கு ஒன்றிய தலைவர் பழனியப்பன்,மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் வீரசெல்வன், உமாசங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

8
1001 views
  
1 shares