logo

தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகள். கம்பம் இராம்ஜெயம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை.

தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகளில், தேனி மாவட்டம் கம்பம் இராம்ஜெயம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

கேரள மாநிலம், கொச்சினில் தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. 1000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்து கொண்டனர்.
இதில் கம்பம் இராம்ஜெயம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்
KSKR.ஹர்ஷவர்த்தன்
கராத்தே பிரிவில்,
கட்டா, குமிட்டே ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், வயது பிரிவில்
2 தங்கப் பதக்கங்களையும்,
யோகாசனப் போட்டிகளில்
1 தங்கப் பதக்கமும், மாணவி
KSKR.ஹரீஷ்மா
கராத்தே கட்டா பிரிவில்
1 தங்கம், யோகாசனப் பிரிவில் 1 தங்கப் பதக்கமும் என ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணாக்கர்களையும், பயிற்சியாளர் டாக்டர்.கராத்தே இராமகிருஷ்ணன் அவர்களையும்,
பள்ளியில் முதல்வர் கயல்விழி, தாளாளர் கவிதா, செயலாளர் சௌந்தர்ராஜன், மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

9
995 views