திருமலை திருப்பதி பிரமோற்சவம் - திருப்பதி திருக்குடை ஊர்வலம்
திருமலை திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு தமிழக பக்தர்கள் பிரார்த்தனைகளுடன் ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் 22.09.2025 தொடங்கியது. 11 வெண்பட்டு குடைகளை உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹிந்து தர்மார்த்த ஸமிதி நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ எஸ். வேதாந்தம் ஜி, அறங்காவலர் ஸ்ரீ ஆர்ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் திருமதி கிரிஜா சேஷாத்திரி ஆகியோரும் பங்கேற்றனர்.
-திருச்சி பிரசன்னா