logo

கும்மிடிப்பூண்டியில் தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்த தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால்


தீயணைப்பு நிலையங்களை ஆய்வு செய்த சீமா அகர்வால் ஐபிஎஸ்

கும்மிடிப்பூண்டி,செப்.27. கும்மிடிப்பூண்டியில் உள்ள கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம், சிப்காட் தீயணைப்பு நிலையம், தேர்வாய் கண்டிகை தீயணைப்பு நிலையங்களை ஆய்வு செய்து தீயணைப்பு துறையினருக்கு பணி
ஆலோசனைகளை வழங்கினார்.

கும்மிடிப்பூண்டியி வட்டத்தில் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம், சிப்காட் தீயணைப்பு நிலையம், தேர்வாய் கண்டிகை தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. கும்மிடிப்பூண்டியில் உள்ள் சிப்காட், தேர்வாய் கண்டிகையில் உள்ள சிப்காட்டில் 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருப்பதால் அடிக்கடி கொதிகலன் வெடித்தும், தீவிபத்தும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ள நிலையில், தீயணைப்பு துறையினர் தீத்தடுப்பு பணிகள், ஒத்திகை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுண்டு

இந்த நிலையில் மேற்கண்ட தீயணைப்பு நிலையங்களை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர், சீமா அகர்வால் ஐபிஎஸ் திடீர் புரிந்து மேற்கொண்டார். இந்த ஆய்வில் தீயணைப்பு நிலையங்களில் பருவ மழை காலங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , தீயணைப்பு நிலையங்களில் உள்ள சிறப்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மீட்பு பணி கருவிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் தொழிற்சாலைகளில் நிறுவப்பட வேண்டிய தீயணைப்பு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு தேவைப்படும் தீயணைப்பு ஊர்தி மற்றும் உபகரணங்கள் குறித்தும் தொழிற்சாலை நிறுவனங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

மேலும் தீயணைப்பு துறையினருக்கு தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொது இடங்களில் தீத்தடுப்பு ஒத்திகை, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த
பணிகளில் ஈடுபட அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் சிப்காட் செயல் இயக்குனர் கேத்தரின் சரண்யா ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஐபிஎஸ், தீயணைப்புத்துறை வடமண்டல இணை இயக்குனர் சத்யநாராயணா, வடமேற்கு மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி, மாவட்ட அலுவலர்கள் லோகநாதன், ராபின் காஸ்ட்ரோ கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலர் சரவணன் நித்தின், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் தீயணைப்பு மீட்பு பணித்துறை ஓட்டுநர்கள் பயிற்சி பெற்று வரும் கும்மிடிப்பூண்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சீமா அகர்வால் ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டு ஓட்டுனர் பயிற்சி மாணவர்களிடையே உரையாற்றினார்.

0
0 views