தவெக நிர்வாகி மீது கொலை வழக்கு பதிவு!
களத்தில் முதல்வர் ஸ்டாலின்
தவெக நிர்வாகி மீது கொலை வழக்கு பதிவு!
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது நாட்டையே உலுக்கியுள்ளது.
இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது பலருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்ததால் இக் கொடூர நிகழ்வு ஏற்ப்பட்ட தாக கூறப்படுகிறது. போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டதாக கள நிலவரங்கள் கூறுகின்றன. மேலும் விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வாட்டும் வெயிலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.குடிக்க தண்ணீரில்லை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 2 பேர் கர்ப்பிணிகள் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.இந்தச் சூழலில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சென்னையில் இருந்து திருச்சி வரை தனி விமானம் மூலம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூருக்கு சாலை மார்க்கமாக வந்தடைந்தார். அவர் சுமார் அதிகாலை 3.15 மணிக்கு கரூர் மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் ஒவ்வொரு நபர்களையும் முதலமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து, சிகிச்சை குறித்த விவரத்தை கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி, மருத்துவர்கள், அதிகாரிகள் உடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்றார்.
அப்போது அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியகருப்பன், எஸ்.எஸ். சிவசங்கர், ரகுபதி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி, அரசு செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளரை சந்தித்த அவர், "மிகுந்த துயரத்தோடு, மிகவும் கனத்த இதயத்தோடு உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கரூரில் நடந்திருக்க கூடிய கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது, அந்தளவிற்கு சோக சூழல் ஏற்பட்டுள்ளது, விவரமாக சொல்லக்கூடிய அளவுக்கு கூட மனது இடம் கொடுக்கவில்லை, அந்தளவிற்கு துயரத்தில் இருக்கிறேன்.
நேற்றிரவு 7.45 மணியளவில் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கரூரில் இதுபோல் கூட்டநெரிசல் ஏற்பட்டு பலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக தகவல்கள் கிடைத்தது. தகவல்கள் கிடைத்ததும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை அழைத்து அதுகுறித்து சென்று ஆய்வு செய்ய சொன்னேன், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டேன், அவரும் என்னிடம் பல தகவல்களை தெரிவித்தார்.
தொடர்ந்து உயிரிழப்பு செய்திகள் வந்தன. உடனே அருகாமை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் அழைத்து உடனே கரூர் செல்லும்படி உத்தரவிட்டேன். அமைச்சர் மா. சுப்பிரமணியத்தையும் உடனடியாக கரூர் அனுப்பிவைத்தேன். ஏடிஜிபி-யையும் கரூருக்கு அனுப்பி வைத்தேன். சென்னை மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபிக்கள் உடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டேன். தொடர்ந்து, கரூரை சுற்றியுள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவர்களை இங்கு விரையும்படி கூறினேன். அதன்படி அவர்களும் வந்துள்ளார்கள்.
இதுவரை ஆண்கள் 13, பெண்கள் 17, சிறுவன் 4, சிறுமிகள் 5 என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 26 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள். உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும். காயமடைந்து சிகிச்சையில் இருப்போருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், சிகிச்சையில் இருப்போர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது " என்றார்.
விஜய் கைதாவாரா? - ஸ்டாலின் பதில்
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, "ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் நோக்கோடு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.