
விஜய்க்கு முட்டுக் கொடுக்கும் அண்ணமலை.. தவெகவுக்கு பின்னால் பாஜக தான் இருக்கு!
-Journalist Gopaal SJ
விஜய்க்கு முட்டுக் கொடுக்கும் அண்ணமலை.. தவெகவுக்கு பின்னால் பாஜக தான் இருக்கு!
-Journalist Gopaal SJ
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கரூரில் நடைபெற்ற நிலையில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, காவல்துறையின் அலட்சியமே இந்த சோக சம்பவத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே உயரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமல் காவல்துறையை அண்ணாமலை கண்டித்துள்ளது, விஜயை பாஜக தான் இயக்குகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல்
சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விஜயின் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும், தமிழக அரசின் காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனக் கூறியிருந்தார். மேலும் திமுக கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு எதிர்க்கட்சி கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
அண்ணாமலை அறிக்கை
இந்நிலையில், உயரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமல் காவல்துறையை அண்ணாமலை கண்டித்துள்ளது, விஜயை பாஜக தான் இயக்குகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தவெக தலைவர் விஜய் அவர்களை இயக்குவது பாஜக தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை தந்துள்ளார். இத்தனை பேர் இறந்துள்ளனர் அதற்கு எந்த கவலையும் தெரிவிக்காமல், வழக்கம் போல காவல்துறை மீது வன்மத்தை கட்டமைக்க முனைகிறார்.
60, ஆயிரம் பேர் நிற்க கூடிய இடத்தில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என காவல்துறையில் எழுதிக்கொடுத்தது யார்? நாமக்கல்லில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட நேரம் காலை 8.45. ஆனால் சென்னை விமான நிலையத்திலிருந்தே கிளம்பியது 8.45 க்கு தான். நாமக்கல்லுக்கு சேர்ந்தது 2.30 மணிக்கு வந்தடைந்தார். கரூரில் பேச வருவதாக அறிவிக்கப்பட்ட நேரம் பகல் 12 மணிக்கு. ஆனால், வந்து சேர்ந்ததோ 7 மணிக்கு. இப்போது சொல்லுங்கள் திரு.அண்ணாமலை அவர்களே, 40 பேர் சாவுக்கும் யார் காரணம்? இன்னும் கூட்டம் வரவேண்டும் என காலம் கடந்து போனது ஏன்?
விஜயை பாஜக இயக்குகிறது
சனிக்கிழமைகளில் பரப்புரைக்கு திட்டமிட்டதற்கு விடுமுறையில் கூட்டம் கூடும் என்பதால் தானே.
அப்படியானால், குறித்த நேரத்தில் திரு.விஜய் வராமல் போனதற்கு யார் காரணம்? இத்தனை குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய விஜய் அவர்களின் செயல்பாட்டை கண்டிக்காமல்,
அவரை காப்பாற்ற பாஜக துடிப்பது ஏன்? தானாடா விட்டாலும் தன்னுடைய சதை ஆடும் என்பார்களே,
அதைப் போல விஜய்க்காக துடிக்கிறது பாஜக
#journalistgopaalsj #karur #karurdeath #ArrestVijay #TVKVijay #TVKparty #actorvijay
#கரூர் #விஜய்_தேர்தல்_பரப்புரை