கம்பத்தில் மளிகை கடையில் தீ : உரிமையாளர்களுக்கு தேனி எம்.பி ஆறுதல்
கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் மின் கசிவின் காரணமாக தீ பற்றி எறிந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் எறிந்து நாசமாகின. இது குறித்த தகவலறிந்த தேனி எம்.பி தங்க தமிழ் செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து கடை உரிமையாளரிடம் தீ பற்றியது குறித்து வெங்கடேசனிடம் கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் வழங்கினார். உடன் மதிமுக மாவட்ட செயலாளர் மகிருஷ்ணன், துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.