logo

ஆயுத பூஜை தினமான இன்று தென்காசி மருத்துவமனையில் புதிய சலவகையம் திறப்பு விழா...

அனைவருக்கும் இனிய சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

இன்று 01-10-2025 நமது தென்காசி மருத்துவமனையில் வாகன கூடாரத்தில் தொடங்கப்பட்டிருக்கும், புதிய சலவையகம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 557 படுக்க வசதி கொண்ட தென்காசி மருத்துவமனையின் படுக்கை விரிப்புகளும் துணிகளும் மூன்று பணியாளர்கள் மூலம் கைகளால் துவைத்துக் கொண்டிருந்தனர். பணியாளர்களின் பணிச் சுமையை கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையின் மூலம் அதிக திறன் கொண்ட ஹெவி டூட்டி சலவை இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை நிர்வாகக் குழுவின் ஆலோசனையின் படி, சொல்லவே இயந்திரம் வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சலவை இயந்திரத்திற்கு பூஜையும் திறப்பு விழாவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின்அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சலவையகம் திறப்பு விழாவில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, எலும்பு முறிவு மருத்துவர்கள் திருமலை, ரவிச்சந்திரன் செவிலிய கண்காணிப்பாளர் திருப்பதி, செவிலியர்கள் செந்தாமரை, முத்துலட்சுமி, பிரேமா QPMS மேலாளர் ராமர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

30
2597 views