logo

நேற்றைய தினம் சென்னையில் அகில இந்திய ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள்...

02/10/2025 அன்று சென்னை,திருவெற்றியூரில்,அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில்,அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் சார்பில், இந்திய நாட்டின் தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவும்,கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழாவும்,ஆயுத பூஜை முன்னிட்டும், ஆர். கே. நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் T.காளிராஜ் அவர்களின் தலைமையில்,அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு ஏ.கே. பாண்டியன் அவர்களும்,அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர்.பார்ப்பாரா தையப் அலி அவர்களும் ,50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய, முதியோர்களுக்கு புடவையும்,50க்கும் மேற்பட்ட கல்வி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களும்,50க்கும் மேற்பட்ட அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளை ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுக்கு வேஷ்டி மற்றும் டிபன் பாக்ஸ் என பல நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

3
327 views