
சமூக தாகம் இன்றைய செய்திகள் 04/10/2025.
4/10/2025 சனிக்கிழமை (புரட்டாசி 18)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்கக் கூடாது என மாநில சுகாதார துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
🗞️ பாஜக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக என முதலமைச்சர் விமர்சனம்
🗞️ விஜய்க்கு தலைமை பண்பே இல்லை,பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் ஓடிவிட்டார்- சென்னை ஹைகோர்ட்
🗞️ திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
🗞️ தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
🗞️ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல்
🗞️ கரூர் கொடூரத்தை விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா தலைமையில் சிறப்பு விசாரணை குழு- உயர் நீதிமன்றம் உத்தரவு
🗞️ தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம் தகவல்
🗞️ வரி மேல் வரி விதிக்கும் அமெரிக்காவிற்கு இந்தியா அடிபணியாது-ரஷ்ய அதிபர் புதின்
🗞️ சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 30 கிலோ தங்கத் தகடுகள்
🗞️ காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம்-அனைத்து வங்கிகளிலும் இன்று முதல் அமலுக்கு வருகிறது
🗞️ தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் இனி நிதானத்தை கடைபிடிக்க மாட்டோம், பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை
🗞️ இஸ்ரேலைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டம்