தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் சார்பில் காமராஜபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் சார்பில் காமராஜபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரம்:
தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் சார்பாக, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வருகிற செவ்வாய்க்கிழமை 7ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காமராஜபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வட்டார ஜமாஅத் பிரதிநிதிகள், உலமாக்கள், கமிட்டி உறுப்பினர்கள், சமூக நண்பர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், ஊடகவியலாளர் செந்தில் வேல் , விடுதலை சிறுத்தை கட்சி கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாகூப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
பலஸ்தீன மக்களுக்கு நீதி கோரி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.