அரியலூர் மாவட்டத்தில் சிவன் கோவிலில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெருஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 23.10.2025 அன்று கோவில் பொருட்கள் திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் அரியலூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த 1.மணிவேல்(வயது 50) த/பெ மாரிமுத்து 2. ராஜீவ்காந்தி(வயது 35) த/பெ கிருஷ்ணன் 3. சின்னதம்பி (வயது 24) த/பெ கருப்பையா 4. செல்லமுத்து (வயது 49)த/பெ மருதமுத்து ஆகிய நான்கு நபர்கள் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதனை அடுத்து அரியலூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் எதிரிகள் நான்கு பேரையும் கைது செய்து, 28.10.2025 இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.