logo

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நிகழ்வு

12.11.2025 அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும்  புதன்கிழமை அன்று நடைபெற்று வருகின்றது. அதன்படி 12.11.2025  இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும்  முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ் செல்வன் அவர்கள் மனுதாரர்களின் தங்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களை விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இந்த முகாமில் இன்றுமட்டும் 41 மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

1
0 views