தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கதிர்வேல் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வல்லூர் எம் எஸ் கே. ரமேஷ் ராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன், மாவட்ட துணை செயலாளர் கேவிஜி.உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் உதயசூரியன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.