logo

மீஞ்சூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் உதயசூரியன் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் ஊராட்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு டீ-ஷர்ட்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வல்லூர் எம் எஸ் கே. ரமேஷ் ராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன், மாவட்ட துணை செயலாளர் கேவிஜி.உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

24
281 views