logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 28/11/2025.

28/11/2025 வெள்ளிக்கிழமை (கார்த்திகை 12)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ டிட்வா புயல் பாதிப்பை தவிர்க்க தயார் நிலையில் இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

🗞️ சென்னைக்கு தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்-வானிலை ஆய்வு மையம்

🗞️ தொடர் மழை காரணமாக இராமேஸ்வரம் வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

🗞️ தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

🗞️ 2026-ல் மாபெரும் புரட்சி உண்டாகி விஜய் வெற்றி பெறுவார்-செங்கோட்டையன்


🗞️ டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் SIR படிவம் வழங்காவிட்டால் பெயர் இடம்பெறாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டம்


🗞️ த.வெ.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

🗞️ கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று வழங்கப்படுகிறது


🗞️ பார்வையற்ற மகளிருக்கான டி-20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

🗞️ மழை பாதிப்பால் இலங்கையில் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக அதிகரிப்பு

🗞️ 4வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு

🗞️ ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி சென்னை, மதுரையில் இன்று தொடக்கம்

16
949 views