
ஸ்ரீ சக்தி விநாயகர் நண்பர்கள் குழு சார்பில்
(8-ஆம் ஆண்டு) ஐயப்பன் திருவிளக்கு மற்றும் மலர் பூஜை விழா
சாமியே சரணம் ஐயப்பா
ஸ்ரீ சக்தி விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 8-ஆம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு மற்றும் மலர் பூஜை
சென்னை, ( டிச.25 & 26 )
புளியந்தோப்பு பகுதியில்
ஸ்ரீ சக்தி விநாயகர் நண்பர்கள் குழு நடத்தும் 8-ஆம் ஆண்டு ஐயப்பன் தெருவிளக்கு மற்றும் மலர் பூஜை விழா.
சூளை அங்காளம்மன் திருக்கோவிலில் கடந்த 25/12/2025 மற்றும் 26/12/2025 ஆகிய தேதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இடம்: சிவரவு சாலை, புளியந்தோப்பு (மணி கேட்டரிங் சர்வீசஸ் அருகில்), சென்னை – 600012.
இந்த ஆன்மிக நிகழ்வில் ஐயப்ப சுவாமிகளும், கன்னி சுவாமிகளும் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி மலர் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
மேலும், பொதுமக்கள் மற்றும் பக்தகோடி அனைவரும் திரளாக பங்கேற்று ஐயப்பனின் அருளைப் பெற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பூஜையை சிறப்பித்த ஐயப்ப சுவாமிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், ஸ்ரீ சக்தி விநாயகர் நண்பர்கள் குழு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.