
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை ஒட்டி ரத்ததான முகாம்
கும்மிடிப்பூண்டி,டிச.28: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் 61-வது பிறந்தநாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த ரில் ரத்ததான முகாம் ஞாயிறறன்று நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசனின் 61வது பிறந்த நாள் விழாவை திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத் தலைவர் எஸ் .சேகர் தலைமையில் கொண்டாடினர். விழாவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து மாநில பொதுக்குழு ஜம்புலிங்கம் மாவட்ட துணை தலைவர் அசோகன் மாவட்ட பொருளாளர் தாஸ் வட்டார தலைவர்கள் மனோகரன், புருஷோத்தமன், காமராஜ், சுரேஷ் ,நாகராஜ், கோபி முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கும்மிடிப்பூண்டி அடுத்த பனங்காட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஜி.கே. வாசன் பேரில் சிறப்பு அர்ச்சனை நடத்தினார்.
அதன் பின்னர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஸ்ரீ சாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், ஸ்ரீ சாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ரத்த வங்கி இணைந்து ரத்த தான முகாமை நடத்தினர். இந்த முகாமை டாக்டர் நீலகண்டன், லயன்ஸ் கிளப் மருத்துவ வங்கி மக்கள் தொடர்பு அதிகாரி முஜீப் ஒருங்கிணைத்து நடத்தினர்.
தொடர்ந்து இந்த முகாமில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 75 பேர் ரத்ததானம் அளித்தனர். அவர்களுக்கு தாமாக மாவட்ட தலைவர் எஸ்.சேகர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
பின் கும்மிடிப்பூண்டி பஜாரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரியில் உள்ள கார்லோபன் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்வுகளில் ஜெகதீஷ், குமரேசன், குமார், ஏழுமலை, கோவிந்தராஜ், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.