திருவரங்கம் புதிய பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு !
நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொது மக்களின் போக்குவரத்து தேவைக்காக திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.
இதன் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து நவீன வசதிகளோடு ரூ. 11.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவரங்கம் புதிய பேருந்து நிலையத்தை இன்று தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் அமைச்சர் கே.என். நேரு அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இந்நிகழ்வில், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோருடன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-திருச்சி பிரசன்னா