கொள்ளையர்கள் வல்லமையோடு செயல்படுகின்றனர் காவல்துறை வழு இழந்து நிற்கின்றனர் திருவலங்காடு சுற்றுவட்டாரத்தில் பீதியில் உறைந்திருக்கும் மக்கள்
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கள்ளச்சாராயம் ஆள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்கள் கட்டுக்குள் அடங்காமல் நடந்து வருகிறது இதில் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து போகின்றன சமீபத்தில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லும் நபர்களை தட்டி கேட்ட பள்ளி மாணவர்களுக்கு அருவாள் வெட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஆபாச வார்த்தைகள் என திருவாலங்காடு சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமாக நடந்த வண்ணம் உள்ளன இதில் ஒரு பகுதியாக அன்று 10/02/2026 சுமார் மாலை 4 மணி அளவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வேணுகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது தக்க பெண்மணியை பீர் பாட்டிலால் அவரது மண்டையை உடைத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றிருக்கின்றனர் கொள்ளை கும்பல் இதை அறிந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் ஆடு மேய்க்கும் இடத்தில் மாடு மேய்க்கும் இடத்தில் கூட கொள்ளையர்கள் விட்டு வைப்பதில்லை கிராமத்தில் தொடர்ந்து ஆடு இருசக்கர வாகனங்கள் மின்சார வயர்கள் என தினந்தோறும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன ஒவ்வொரு நாளும் குற்ற சம்பவங்கள் ஏராளமாக அரங்கே இருக்கின்றன கிராமங்களில் கூட சர்வ சாதாரணமாக கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற செயல்கள் இதுவரை நடந்ததில்லை தற்போது அதிகரித்து வருகிறது என கதறுகின்றனர் கிராம மக்கள் காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்தாலும் அதற்குரிய நடவடிக்கை கால தாமதமாகுவதால் கொள்ளையர் கூட்டத்திற்கு மகிழ்ச்சியாக உள்ளனர் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து கொலை கொள்ளை ஆள் கடத்தல் போன்ற செயல்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக இப்பகுதியில் நடப்பதாகவும் இதை உளவுத்துறை அதிகாரிகள் சரியான முறையில் கையால் முடியவில்லை அல்லது குற்றம் செய்யும் நபர்களை தெரிந்து தப்பிக்கப்படுகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் நாம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவலர்கள் பற்றாக்குறை நீடிக்கின்றனர் இதில் முதலமைச்சர் பாதுகாப்பு ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் கூட்டங்கள் பாதுகாப்புக்கு என்று எங்கள் நேரம் சரியாக உள்ளது இதில் நாங்கள் எங்கிருந்து மக்களை பாதுகாப்பது குற்றங்களை தடுப்பது உயர் அதிகாரிகள் போடும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு உள்ளோம் ரோந்து வாகனங்கள் கூட எங்களுக்கு சரியாக கொடுக்கவில்லை கை துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் டிஜிபி கொடுத்திருந்த உத்தரவை கூட அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை இச்சூழலில் சில அரசியல் முக்கிய புள்ளிகள் கஞ்சா புகையிலை போன்றவற்றை போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றனர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே அவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை கீழ்மட்ட அதிகாரிகளை தொடர்ந்து குறை கூறாதீர்கள் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது ஒரு வருடத்திற்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட புதிய எஸ்பி தமிழ் சரியாக தெரியாத காரணத்தினாலும் அவரிடத்திலே உள்ள முக்கிய சில காவலர்கள் அவருக்கு நேரடியாக தகவல்களை தெரியப்படுத்தாமல் இருப்பதாலும் அதே போன்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சரியான முறையில் தகவல்கள் செல்வதில்லை இதைத் தொடர்ந்து குற்றவாளியை தேடி காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தால் கூட அவர்கள் நீதிமன்றம் ஆஜர் படுத்தும்போது மாமியார் வீட்டிற்கு சென்று வருவது போல் குற்றம் செய்தவர்கள் சர்வ சாதாரணமாக முன் ஜாமின் வாங்கிக் கொண்டு வெளியே வருகின்றனர் காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறை யும் சரியான முறையில் குற்றவாளிகளை தண்டிக்க படாவிட்டால் அவர்களின் குடும்பத்தில் யாரேனும் பாதிக்கப்படும்போது எங்களது வருத்தம் புரியும் என்று புலம்புகின்றனர் சாமானிய மக்கள் இனிமேலாவது திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றச்சம்பழங்கள் குறையுமா குறிப்பாக திருவாலங்காடு சுற்றுவட்டாரங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் போதை பொருட்கள் ஒழிக்கப்படுமா குற்றங்களை தடுப்பார்களா காவல்துறை அதிகாரிகள் என சமூக ஆர்வலர்களின் ஏங்கிக் கொண்டுள்ளனர்