முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.5000/-வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே. சந்திரசேகர் தலைமையில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள். இதில் திமுக ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.