logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன்..!

சென்னை துறைமுகத்தில் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், கடந்த தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகவும், அதில் 90 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு சாதி, மத பேதமற்ற கட்சி எனவும் அனைத்து மத விழாக்களலும் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார் எனவும் குறிப்பிட்டார்.கடந்த 70 ஆண்டுகளில் 4 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டிள்ளார்.

0
28 views

Comment