logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கம்பத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் கம்பம் நகர வடக்கு, தெற்கு திமுக நகர் கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் இன்று கம்பம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, வேட்டு வெடித்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பின்னர் கம்பம் வரதராஜபுரத்தில் உள்ள தர்மஸ்தலத்தில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகர செயலாளர்கள் வீரபாண்டியன் (வடக்கு), பால்பாண்டியராஜா (தெற்கு), தலைமை செயற்குழு உறுப்பினர் குருகுமரன் மற்றும் மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உடன்பிறப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

4
371 views

Comment