logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கம்பம் விஸ்வகர்ம சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கம்பம், மார்ச். 09-
கம்பம் உத்தமபுரம் கிராமம் அலுவலகம் அருகே விஸ்வகர்ம சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகுவிஸ்வகர்மா காயத்ரி தேவி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது இன்று காலை 4ம் கால யாகபூஜை, நாடிசந்தானம், தீபாரதனை நடைபெற்றது .இதனை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து எடுத்து கோவில் கோபுரத்தை வந்தடைந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க காமாட்சி அம்மன் , விஸ்வகர்மா காயத்ரி தேவி மற்றும் விநாயகர், விஸ்வகர்மா, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், தர்மசாஸ்தா மற்றும் நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கம்பம் நகர விஸ்வகுல மகாஜன மத்திய தலைமை சங்கத்தினர், இளைஞரணியினர் செய்திருந்தனர்.

14
1382 views

Comment