logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழ்நாடு – வேலூர் மாவட்டம். - AP சித்தூரில் செய்தியாளர் படுகொலை கண்டனம்: வேலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து பத்திரிக்கையாளர்கள் மௌன அஞ்சலி

தமிழ்நாடு – வேலூர் மாவட்டம். - AP சித்தூரில் செய்தியாளர் படுகொலை கண்டனம்: வேலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து பத்திரிக்கையாளர்கள் மௌன அஞ்சலி



வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா அலுவலகம் அருகே, AP சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் படுகொலை சம்பவத்தை கண்டித்து, மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மௌன அஞ்சலி செலுத்தினர். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், வெங்கடகிரி கோட்டா (வி.கோட்டா) பகுதியில், ஆந்திரா ஜோதி பத்திரிகை செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டி என்ற செய்தியாளரை கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும், பிரஜா சக்தி பத்திரிகை செய்தியாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தை கண்டித்து, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதியான முறையில் ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், நாட்டில் நாளுக்கு நாள் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு தலையிட்டு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, இந்திய ஜனாதிபதி மற்றும் பாரதப் பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று, பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தனர். இதில் டாக்டர். ராஜ்பாபு (நியூஸ் நேசன் 81 டி.வி., ஏ.கே. டி.வி, பாரத தூண்கள் மக்கள் கருத்து நாளிதழ், தினகலர் நாளிதழ், மக்கள் குத்து நாளிதழ், மக்கள் அதிகாரம்), முஜிப் ரகுமான் (தேசபக்தி, காஞ்சித் தலைவன் நாளிதழ்), முருகானந்த வாரியார் (சட்டக்களம் நாளிதழ்), எழிலரசன் (மக்கள் வெளிச்சம் நாளிதழ்), பிரபு (PTI) , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

24
411 views

Comment