logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

திருவெற்றியூரில் ,ஆட்டோ ஓட்டுனர் நல சங்க நிர்வாகிகளுடன் ஏகே பாண்டியன் சந்திப்பு...

24/05/2026 அன்று சென்னை, திருவெற்றியூரில் உள்ள சுனாமி குடியிருப்பில்,அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் A.K.பாண்டியன், ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் நிர்வாகிகளுடன் சந்தித்து .
எல்பிஜி கேஸ் விலை உயர்வு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை குறித்து ஆட்டோ ஓட்டுநர்களின் குமுறல்களை கேட்டு அறிந்தார்.

நிலவி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை உயர்வானது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கின்றது.இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என பல்வேறு கோரிக்கைகள் உள்பட விரைவில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று உறுதியளித்தார் .இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1
36 views

Comment